பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்த பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
67

இந்தியாவில் சுமார் 2 வருட காலம் இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக, மாணவர்களின் கல்வி கற்றல் திறன் குறைந்து வருவதாக பலரும் தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக, அனைவரும் சோகத்தில் இருந்தாலும் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விடுமுறையின் காரணமாக மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருந்து வந்தார்கள்.

ஆகவே நோய்த்தொற்று மெல்ல, மெல்ல குறைய தொடங்கியதை தொடர்ந்து 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வி வருடத்திற்கான நேரடி வகுப்புகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

வழக்கமாக மார்ச் மாதத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பமாகும் இதனை தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் இதுதான் வழக்கமாக நடைபெறும் செயலாகும்.

நடப்பு கல்வி ஆண்டில் நோய்த்தொற்று காரணமாக, தேர்வுகள் சற்று தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் 5ம் தேதி ஆரம்பித்து 28ம் தேதி முடிவடைகிறது.

அதேபோல 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ம் தேதி பொதுத்தேர்வு ஆரம்பித்து 31ம் தேதி வரையிலும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மே மாதம் 6ம் தேதி ஆரம்பமாகி 30ஆம் தேதி வரையிலும் நடைபெறவிருக்கிறது.

இதை தவிர 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மே மாதம் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, மே மாதம் 13ஆம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது இதில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டுள்ளது.