இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? 

0
39
#image_title
இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!?
இன்று(அக்டோபர்14) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது. இதனிடையே போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இசை நிகழ்ச்சி நடைபெறப்போவதாக தகவல்கள்கள் வெளியாகி இருக்கின்றது.
உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட இரண்டு போட்டிகளை விளையாடி முடிந்துள்ளது. தொடக்கவிழா நடத்தப்பட்டால் தொடங்கிய உலகக் கோப்பை தொடர்பு இதுவாகும்.
இதையடுத்து உலகக் கோப்பை தொடரில் தொடக்க விழா இல்லை என்ற கவலையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் சரி செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இன்றைய(அக்டோபர்14) போட்டியில் தொடக்க விழா இல்லை என்றாலும் பிரபல சினிமா நட்சத்திரங்கள் பலரும் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்திற்கு போட்டியை காண வருகை தரவுள்ளனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தரவுள்ளனர். மேலும் பலர் கலந்து கள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
அதன் படி இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் பின்னணி பாடகர்கள் சங்கர் மகாதேவன், அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோருடைய இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த இசை நிகழ்ச்சி இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பை தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. இரண்டு அணிகளும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய இரண்டு அணிகளும் இன்று(அக்டோபர்14) விளையாடவுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதும் இந்த போட்டி இன்று(அக்டோபர்14) மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளில் மூன்றாவது வெற்றியை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூன்றாவது வெற்றியை பெறுவதற்கு இரண்டு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.