தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி!!! இன்ஜினியரிடம் 12 லட்சம் அபேஸ் பண்ணிய பெண்!!! 

0
34
#image_title
தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி!!! இன்ஜினியரிடம் 12 லட்சம் அபேஸ் பண்ணிய பெண்!!!
புதுச்சேரியில் இன்ஜினியர் ஒருவரிடம் ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் பெண் ஒருவர் 12 லட்சம் ரூபாயை ஏமாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை அடுத்த நவற்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதான ராமகிருஷ்ணன் அவர்கள் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதாவது பகுதிநேரம் வேலை செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இந்த குறுஞ்செய்திக்கு ராமகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்து அவர்கள் கேட்ட கேள்விக்கு ராமகிருஷ்ணன் அவர்கள் பதிலும் தெரிவித்தார்.
இதையடுத்து இராமகிருஷணன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 150 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இராமகிருஷ்ணன் அவர்களை சோபி என்ற பெண் தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் குழுவில் சேருமாறு கேட்டார். உடனே இராமகிருஷ்ணன் அவர்கள் இன்ஸ்டாகிராம் குழுவில் இணைந்தார்.
மேலும் அந்த குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இராமகிருஷ்ணன் பதில் அளிக்க அவருக்கு 650 ரூபாய் கிடைத்துள்ளது. இதையடுத்து இராமகிருஷணன் அவர்களை தொடர்பு கண்ட செபி நீங்கள் இதில் பணம் முதலீடு செய்து நாங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் அதிக இலாபம் ஈட்ட முடியும் என்று கூறியுள்ளார்.
அதிக இலாபம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் பல தவணைகளாக 11 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை அதில் முதலீடு செய்தார். இதன் மூலமாக அவருக்கு 14 லட்சத்து 54 ஆயிரத்து 228 ரூபாய் இருப்பதாக காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகையை வங்கிக் கணக்கில் மாற்றிவிடலாம் என்று முயற்சி செய்த பொழுது அதை வங்கிக் கணக்கில் மாற்ற முடியவில்லை.
இதையடுத்து உடனடியாக இராமகிருஷ்ணன் சோபியை தொடர்பு கொண்டார். ஆனால் சோபி அவர்களின் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இராமகிருஷ்ணன் அவர்கள் புதுச்சேரி மாநில சைபர் காவல்துறைக்கு புகார் அளித்தார்.
இதையடுத்து இராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து மோசடி செய்த சோபி என்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பெரும்பாலும் இது போலீஸ் மோசடி செய்பவர்கள் உண்மையான பெயரையே எண்ணையே கொடுக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.