அன்னிய நாட்டு சந்தைகளில் நிராகரிக்கப்படும் இந்திய தேயிலை!

0
69

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் தாய்வான் தேயிலை இறக்குமதி முக்கிய நாடாகும். அந்த நாட்டின் தேயிலை இறக்குமதியில் பெரும்பாலானவை வியட்நாம், இலங்கை மற்றும் சீனாவில் இருந்து வருகின்றன.

பெரும்பாலும் வியட்நாம் கிரீன் டீ அல்லது கருப்பு தேயிலை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறது. இலங்கை பெரும்பாலும் கருப்பு தேயிலையை ஏற்றுமதி செய்து வருகிறது, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக, தேயிலை ஏற்றுமதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அதற்கு அடுத்தபடியாக தேயிலை ஏற்றுமதி நாடான இந்தியாவிற்கு தய்வான் சந்தையில் நுழையும் நல்லதொரு வாய்ப்பு கடந்த சில வருடங்களாக கிடைத்திருக்கிறது.

உலகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் 4வது மிகப்பெரிய நாடு இந்தியா தேயிலையில் பூச்சி புழுக்கள் வராமல் இருக்க quinalphos என்ற ரசாயனம் உபயோகிக்கப்படும். உலக சந்தையில் ஐரோப்பிய ஐக்கியம் உலர்ந்த தேயிலை ஒரு கிலோவிற்கு 0.7 மில்லிகிராம் வரையில் மற்றும் ஜப்பான் 0.1 மில்லி கிராம் வரையில் இதனை உபயோகப்படுகிறது. ஆனால் இந்திய தேயிலை அமைப்பு கிலோவிற்கு 0.01 மில்லிகிராம் என்பதையே தரமாக நிர்ணயம் செய்துள்ளது.

இந்திய தேயிலை தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் ௦.1 தரத்தில் உற்பத்தி செய்வதால் உலக நாடுகள் அனைத்தையும் சந்தையில் கைப்பற்றி விடலாம் என்ற நிலையில் இருக்கிறது.

ஆனால் கடந்த சில மாதத்திற்கு முன்பாக தைவானுக்கு அனுப்பப்பட்ட 600 கொள்கனில் 2 கலனில் இருந்ததேயில்லை தைவான் தர நிர்ணயத்தை விட அதிகமாக கொண்டிருந்த காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அவை இரண்டும் கல்கத்தாவை சார்ந்த தயாரிப்பு நிறுவனம் என சொல்லப்படுகிறது. இதே quinalphos அதிக அளவுகளில் தான் வியட்நாம், சீனா, நாடுகளின் சந்தையில் மிகப்பெரிய அடி வாங்குகிறது என சொல்லப்படுகிறது.

மத்திய ஆசிய நாடுகளில் டீ பிரியர்கள் அதிகம் என்றே சொல்லலாம் ஏனென்றால் அதன் சந்தையை இலங்கை, இந்தியாவிற்கு விட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு பெரிதும் சாதகமாக அமைந்திருக்கிறது. வருடத்திற்கு சுமார் 35 மில்லியன் கிலோ தேயிலை இந்தியாவிலிருந்து ஈரானுக்கு அனுப்புகிறது.

ஆனால் அதில் ஒரு கொள்கலன் திரும்ப அனுப்பப்பட்டுள்ளது, பைட்டோ சானிட்டரி பிரச்சனைகள் காரணமாக, இதுவே திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுகாதார தரத்தில் அந்த தேயிலையில் தோல்வியடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.