தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி!

0
95

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை முதல் கட்சியாக பெறத்தொடங்கியது திமுக. அந்த விதத்தில் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விருப்பமானவை கொடுத்திருக்கிறார்கள் ஏராளமானோர்.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்சியின் சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்களுக்கு வேட்பாளர்களின் நேர்காணல் குறித்த அறிவிப்பை திமுக வெளியிட்டிருக்கிறது. வேட்புமனு கொடுத்தவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் 6ம் தேதி வரை மாவட்ட வாரியாக நேர்காணல் நடக்கும் என்று திமுகவின் தலைமை கழகம் அறிவித்து இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே விருப்ப மனுக்கள் வாங்க தொடங்கிவிட்டது திமுக. இதற்கு இடையில் தேர்தல் தேதி மிக நெருங்கி வந்து விட்ட காரணத்தால், அடுத்த கட்ட வேலைகளை வேகப்படுத்தி இருக்கிறது அந்த கட்சி. அதே சமயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் திமுக சார்பாக திருச்சியில் நடைபெறவிருந்த மாநில மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .