கொரோன தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து? தடுப்பூசியை தடை செய்த நாடுகள்! பீதியில் மக்கள்!

0
73
Is the corona vaccine life threatening? Countries that have banned the vaccine! People in tension!
Is the corona vaccine life threatening? Countries that have banned the vaccine! People in tension!

கொரோன தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து? தடுப்பூசியை பான் செய்த நாடுகள்! பதற்றத்தில் மக்கள்!

கொரொனோ பாதிப்பானது உலக நாடுகளையே ஓராண்டு காலமாக உலுக்கி வந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து பல உயிர்களும் பறிபோனது.நாளடைவில் கொரோனாவின் தாக்கமானது குறைந்த நிலையில் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மக்களின் நலனுக்காக அந்த தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை   கண்டுபிடிக்க ஆராச்சி செய்து வந்தனர்.அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கினார்கள்.

இந்த தடுப்பூசியானது பல சோதனைகளுக்கு பிறகு பல நாடுகளில் போடப்பட்டு வருகிறது.இந்தியாவில் மட்டும் 3 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு போடப்பட்டுள்ளது.சில வெளிநாடுகளில் இந்த கொரோன தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளது.இதனால் நேற்று முன்தினம் அயர்லாந் அரசும் கொரோனா தடுப்பூசிக்கு தடைவிதித்துள்ளது.அதைனைத்தொடர்ந்து ஜெர்மனி,பிரான்ஸ்,இத்தாலி,நெதர்லாந் ஆகிய நாடுகளும் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள தடைவித்துள்ளனர்.முன்னெச்சரிக்கை காரணமாக இந்த தடை பிரபிக்கப்படுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறுகிறது.

ஆனால் இந்தியாவில் அஸ்ட்ராஜெனகா கோவிஷீல்டு  தடுப்பூசியை குறித்து எந்த வித தகவல்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.நம் இந்தியாவில் இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானவை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே கூறிவருகின்றனர்.அதனைத்தொடர்ந்து வெளி நாடுகள் சிலர் இதை தடை செய்துள்ளதால் அஸ்ட்ராஜெனகா கோவிஷீல்டு தடுப்பூசியை குறித்து மீண்டும் ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழுவினர் நாளை சந்திக்க உள்ளனர்.

இந்த தடுப்பூசியினால் ஏற்படும் பிரச்சனைகளை மீண்டும் ஆராச்சி செய்வதாகவும் மற்றும் ஐரோப்பிய மருத்துவ அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் கூறினர்.தற்போதைக்கு தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டிய தேவை இல்லை எனக் கூறியுள்ளனர்.இந்த தடுப்பூசி மிகவும் பாதுகப்பானவையே என்று தெரிவித்தனர்.தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் இந்த செய்தியை கேட்டு பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.