மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!! 

0
30
#image_title

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!!

மகளிர் இட ஒதுக்கீடு தற்பொழுது சட்டமாக மாறியுள்ளது என்று மகிழ்ச்சி கொள்ள முடியாது. ஏன் என்றால் இது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு நாரி சக்தி வந்தன் அதிநியம் என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு தவிர மற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. மாநிலங்களவையில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரது ஒப்புதல் பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு மசோதா சட்டமாக மாற்றப்படும்.

இந்நிலையில் நேற்று(செப்டம்பர்29) குடியரசு தலைவர் அவர்களும் அதற்கு முன்னர் குடியரசுத் துணைத்தலைவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த சட்டம் அரசியலமைப்பின் 106வது திருத்தச் சட்டம் என்று அறியப்படும் என அரசு கூறியுள்ளது. இதையடுத்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மசோதா சட்டமாக மாறினாலும் அதை நடைமுறைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகிவிட்டதாக அரசு கூறியுள்ளது. இந்த மசோதா சட்டமாகி இருக்கலாம், ஆனால் பல ஆண்டுகள் ஆனாலும் சட்டம் நடைமுறைக்கு வராது. 2029 லோக்சபா தேர்தலுக்கு முன் கூட இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படாது. இந்த சட்டத்தால் என்ன பயன்?” என்று பதிவிட்டுள்ளார்.