ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களை குழப்பிய ஜடேஜா! அதிரடி பந்து வீச்சில் சீர்குலைந்த ஆஸ்திரேலியா!

0
235
#image_title

ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களை குழப்பிய ஜடேஜா! அதிரடி பந்து வீச்சில் சீர்குலைந்த ஆஸ்திரேலியா! 

இந்திய அணிக்கு எதிரான முதலாவது நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் நேற்று நாக்பூரில் பார்டர் கவாஸ்கர் கோப்பை முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை உடனடியாக தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவஜாவும் அடி எடுத்து வைத்தனர். ஆரம்பமே அந்த அணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. சிராஜ் பந்து வீச்சில் ஒரு ரன்னில் கவாஜா வெளியேறினார். மூன்று ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. 3- வது விக்கட்டுக்கு சேர்ந்த துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் ஓரளவு ரன் குவித்தனர்.

அடுத்து வந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலிய அணியை சீர்குலைத்தார். அவரது பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கட்டுகள் சரிந்தன. மூத்த பந்துவீச்சாளர் அஸ்வினை விட ஜடேஜாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. அஸ்வின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் முதற்கட்ட பந்துவீச்சில் ஆஸ்திரேலியா வீரர்கள் சுலபமாக ரன் எடுத்தனர்.

முக்கிய கூட்டணிகளை உடைத்து ஜடேஜா மற்றும் அஸ்வின் அதிரடி காட்டினர். இறுதியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 15 ரன்னில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை அலேக்காக தூக்கினார். கால் முட்டி காயத்திற்கு ஆபரேஷன் செய்து ஐந்து மாத ஓய்விற்கு பின் மறுபிரவேசம் செய்த ஜடேஜா முதல் போட்டியிலேயே அதிரடி காட்டி உள்ளார். முதல் போட்டியில் முத்திரை பதித்த ஜடேஜா ஆட்டம் முடிவுக்கு பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நாக்பூர் ஆடுகளம் (பிட்ச்) முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றார் போல் சுழன்று திரும்பும் ஆடுகளமாக இல்லை. இந்தியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது இது மெதுவாகவும், அதிக பவுன்ஸ் இன்றியும் காணப்படுகிறது. இதனால் இன்றைய நாள் (நேற்று) பேட்ஸ்மேன்கள் பந்தை தடுத்து ஆடுவதில் சிரமமாக இல்லை. ஆனால் போக போக தற்காப்பு பாணியில் ஆடுவது சிரமமாக இருக்கும்.  

நான் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை குழப்பினேன். ஒவ்வொரு பந்தையும் சுழன்று திரும்பும் வகையில் வீசவில்லை. ஆடுகளம் வேகமின்றி இருந்ததால் அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன் மனதில் சந்தேகம் ஏற்படும் வகையில் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசினேன். அதற்கு பலன் கிடைத்தது. லபுஸ்சேன் கிரீசை விட்டு இறங்கி வந்து விளையாடிய போது களத்தில் பந்து பிட்ச் ஆனதும் சுழன்று திரும்பியதால் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார். அதே நேரத்தில் சுமித்துக்கும் பந்தை அதே இடத்தில் தான் பிட்ச் செய்தேன். ஆனால் பந்து சுழலாமல் அப்படியே நேராக சென்று ஸ்டம்பை தாக்கியது. என்று அவர் கூறினார்.

இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.