லலித் குமார் ஆதிக்கம் செலுத்துகிறார்!!! திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி!!! 

0
35
#image_title
லலித் குமார் ஆதிக்கம் செலுத்துகிறார்!!! திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி!!!
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படத்தால் பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை என்றும் லலித் குமார் போன்றோர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த அக்டௌபர் 19ம் தேதி உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படம் எதிர்மறையான கருத்துக்கள் பெற்றுள்ளது.  இந்நிலையில் வெளியான வெளியான ஆறு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக நேற்று(அக்டோபர்25) வெளியிட்டது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் லியோ படத்தால் லாபம் ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் “நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த திரைப்படத்தால் தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் ஒன்றும் இல்லை. பங்கீட்டு தொகை என்ற பெயரில் லலித் குமார் அவர்கள் 80 சதவீதத்தை பெற்றுக் கொண்டார். கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 60 சதவீதம் பங்கீட்டு தொகையை பெற்றவர்கள் தமிழகத்தில் அதிக தலையை பெற்றுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் லியோ திரைப்படத்தை வெளியிட்டிருந்தால் நியாமாக நடந்திருப்பார்கள். லலித் குமார் அவர்களின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடும் ஒப்பந்தத்தை போட்டனர்.
லியோ திரைப்படத்துடன் வேறு எதாவது நல்ல திரைப்படம் வெளியாகி இருந்தால் லியோ திரைப்படத்திற்கு இத்தனை திரையரங்குகள் கிடைத்திருக்காது. தீபாவளி வரும் வரை வேறு எந்த திரைப்படமும் வெளியாகிறது என்ற சூழலை பயன்படுத்திக் கொண்டு பல நெருக்கடிகளை திரையரங்குகளுக்கு கொடுத்தனர். இதனால் வேறு வழி இல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் விருப்பம் இல்லாமல் லியோ திரைப்படத்தை தங்களுடைய ரிலீஸ் செய்தனர். லலித் குமார் போன்றோர் இப்படி ஆதிக்கம் செலுத்தினால் திரைத்துறை எவ்வாறு இயங்க முடியும்” என்று நேர்காணலில் கூறியுள்ளார்.