Thursday, September 19, 2024
Home Blog Page 4906

இப்படி ஒரு பக்தி தேவையா? வைரலாகும் வீடியோ

0

அயோத்தி ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவர உள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த தீர்ப்பை அடுத்து எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்
அயோத்தி பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் வேறு பகுதிக்கு தற்காலிகமாக குடியேறி இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன

https://twitter.com/ExSecular/status/1192405745062440961

இந்த நிலையில் ஒரு தீவிர ராமர் பக்தர் சுமார் 20 அடி நீளத்தில் ஒரு காவி கொடியை கையில் ஏந்தி, பிஸியான சாலையின் நடுவில் நின்று இங்கும் அங்கும் கொடியை ஆட்டிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

இதனால் அந்த பகுதியில் இரு பக்கமும் செல்லவேண்டிய வாகனங்கள் தடைபட்டு நின்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் அந்த ராமர் பக்தருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொது மக்களை தொந்தரவு செய்யும் அளவுக்கு பக்தி முற்றிப் போய் இருப்பது பக்தியையே கேலி செய்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முக ஸ்டாலினுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறிய நன்றி!

0

திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் திமுக தலைவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சி காலத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முக ஸ்டாலின் பெயர் இல்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டது வேறொரு வழக்கில் என்றும், சமீபத்தில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி ஒன்றில் கூறினார். இதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஊடகம் ஆதாரத்துடன் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த ஊடகத்திற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காத திமுகவினர், நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் செய்தனர். அவரது வீட்டின் முன்னால் நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்து அமைச்சரின் உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திட தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் முக ஸ்டாலினின் இந்த வேண்டுகோளுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் நன்றி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து முதல்வரிடம் விளக்கம் அளித்துள்ளதாகவும், தனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

0

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து காவி நிறத்தை பிரபலப்படுத்தி, நாடு முழுவதும் பரப்பி வருவதை அக்கட்சி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்த பின்னர் மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் காவி மயம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் உள்பட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஒரே காவி மயமாக இருப்பதால் அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி உள்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் கூட சமீபத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரம் பெரும் பிரச்சனையாகி தற்போதும் அது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசின் சார்பில் கட்டப்பட்ட கழிவறை ஒன்றுக்கும் காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இன்னும் திறக்கப்படாத இந்த கழிவறை, காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் ஒருவேளை இது கோயிலாக இருக்கும் என்று நினைத்து அந்த வழியாக போவோர் வருவோர் வணங்கி செல்வதாகவும் ஒரு சிலர் பூட்டப்பட்ட அந்த கழிவறைக்க்கு வெளியே சூடம் பத்தி வைத்து பூஜை செய்வதாகவும் செய்திகள் வெளிவந்தன

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக காவி நிறத்தை மாற்றி பிங்க் நிறத்தில் பெயின்ட் அடித்ததோடு, கழிவறை என்ற போர்டும் வைக்கப்பட்டது. அதன்பின்னரே பொதுமக்களுக்கு அது பொது கழிப்பறை என்பதும் இவ்வளவு நாள் ஒரு கழிப்பறைக்கா பூஜை செய்தோம் என்றும் தெரிய வந்தது

காவி நிறம் என்பது புனிதமான நிறமாக இருந்ததாலும் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் மட்டுமே அதற்குரிய மரியாதை கிடைக்கும் என்பதே இந்த சம்பவத்தில் இருந்து உபி அரசுக்கு கிடைத்திருக்கும் பாடம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது

கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

0

சமூக வலைத்தளங்களில் கஸ்தூரி அவ்வபோது சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்வதும் அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள். அந்த வகையில் இன்று கஸ்தூரி இன்று சர் சிவி ராமன் அவர்களின் பிறந்த நாள் என்றும் அவருக்கு வாழ்த்து கூறலாம் என்றும் போட்ட ஒரு பதிவுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘முதலில் ஒழுங்கா துணி போடு’ அப்புறம் வாழ்த்து சொல்லலாம் என்று கூற அதற்கு கஸ்தூரி எனக்கு நீயே கொஞ்சம் துணி வாங்கிக்கொடேன்’ என்று பதிலடி கொடுத்தார்.

அந்த டுவிட்டர் பயனாளியும் விடாமல், ‘கற்புக்கரசி துணி கேட்கிறார்’ இதில் எந்த துணியை வாங்கி கொடுப்பது’ என்று கஸ்தூரியின் பழைய கவர்ச்சி உடை புகைப்படங்களை பதிவு செய்தார்.

டுவிட்டர் பயனாளியின் இந்த கருத்தை அடுத்து கஸ்தூரிக்கு டுவிட்டரில் ஆதரவு குவிந்தது. கஸ்தூரியை தரம் தாழ்ந்து பலவித மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்த அந்த டுவிட்டர் பயனாளிக்கு கண்டனம் குவிந்து வருகிறது

சர்.சி.வி. ராமன் குறித்து கஸ்தூரி தொடங்கிய டுவிட் கடைசி ஆபாசமாக முடிவடைந்தது குறித்து அனைவருக்கும் வருத்தமே

https://twitter.com/aiswaryavenkat/status/1192363879025610753

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

0

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி அபாரமாக வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது மேற்கு வங்க தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோதி தொடர் வெற்றியை பெற்று வந்த இந்திய அணி வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது

இந்நிலையில் இன்று ராஜ்கோட் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது

ஸ்கோர் விபரம்: வங்கதேசம் – 153/6 20 ஓவர்கள்

முகமது நயீம்: 36 ரன்கள்
சவும்யா சர்க்கார்: 30 ரன்கள்
மஹ்முதுல்லா: 30 ரன்கள்
லிட்டன் தாஸ்: 29 ரன்கள்

முதல் டி20 போட்டியில் அபாரமாக விளையாடிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முசாஃபீர் ரஹிம் இன்று 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்

இந்த நிலையில் 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த இலக்கு இந்திய பேட்ஸ்மேன்களை பொருத்தவரை எளிதான இலக்கு என்றாலும் இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் சுதாரிப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

0

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள் கூறிய போது ’தனி அதிகாரிக்கு நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, மேலும் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பையும் அனைத்தையும் செய்து கொடுப்போம். இந்த பிரச்சினை தொடர்பாக நாங்கள் முதலமைச்சரையும் செய்தித் துறை அமைச்சரையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். நாங்கள் சட்டரீதியாகவும் ஜனநாயகத்துடன் தேர்தலை எதிர்கொண்டோம். இனிமேலும் சட்ட ரீதியாகத்தான் செயல்படுவோம் என்று கூறினார்

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பூச்சிமுருகன் பதில் கூறிய போது ’சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். நான்கு பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3000 பேர் உறுப்பினராக கொண்ட சங்கத்திற்கு ஒரு தனி அதிகாரியை நியமித்து உள்ளது சரியான நடவடிக்கை அல்ல. ராதாரவி காலத்தில் சங்கத்தில் பல குளறுபடிகள் இருந்தபோது இந்த நடவடிக்கையை ஏன் அப்போதைய அரசு செய்யவில்லை’என்று கேள்வி எழுப்பினார்

மேலும் நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அனைவருக்கும் பென்ஷன் சென்று கொண்டிருந்தது என்றும், எனவே சங்கம் செயல்படவில்லை என்று கூறுவது தவறு என்றும் கூறினார்.

விரைவாக தொப்பையை குறைக்க எளிதான வழி

0

விரைவாக தொப்பையை குறைக்க எளிதான வழி

பலருக்கும் பிரச்சனையாக இருக்கும் உடலில் வயிற்றை சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், அவர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை அல்லது உணவு முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. ஆனால் நமக்கு நாமே தான் உடல் பிரச்சினையை கொடுக்கும் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக நாகரிகம் என்ற பெயரில் தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பெரும்பாலோனோர் இந்த வாழ்க்கை முறை ஆரோக்கியமற்றது என்று தெரிந்திருந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிய பிறகு உடலில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், அந்த பிரச்சினையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். இத்தகைய பிரச்சினைகளில் ஒன்று தான் உடலில் ஏற்படும் தொப்பை. ஆனால் இத்தகைய பிரச்சினையான தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது என்பது பலருக்கும் தெரியாது.

இதற்கு முதலில் அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்வது தான். இதனால் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையையும் எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் நாம் செய்யும் உடற்பயிற்சி ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் உதவுவதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அந்த பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பையும் குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒரு சில உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலானோர் வாழ்வில் பெரும் தொல்லையாக இருக்கும் தற்போது வேகமாக பரவி வரும் பிரச்சினையான தொப்பை உருவாக நம்முடைய செயல்களே காரணமாக அமைந்துள்ளது. அதாவது இதற்கு காரணம் நாம் வேலை செய்யும் முறை. உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பது. இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்தி கொண்டு இருப்பது. காலையில் நேரம் கழித்து எழுவது போன்றவையே.

இதனையெல்லாம் கட்டுப்படுத்தி காலையில் நேரத்துடன் எழுந்து இதற்கான உடற்பயிற்சியான தனுராசனம் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து தொப்பை உடலிலிருந்து காணாமல் போய்விடும்.

தனுராசனம் செய்ய குப்புற படுத்துக் கொண்டு, கைகளை பக்கவாட்டில் தொடை ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ அட்டகாசமான மோஷன் போஸ்டர்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. தமிழில் கமலஹாசன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் இந்தியில் சல்மான்கான் ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் ’தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிடப்பட்ட தமிழ் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் என்பது இந்த மோஷன் போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் போலீஸ் உடையில் அட்டகாசமாக எதிரிகளை கத்தியால் தாக்கும் காட்சியும் மோஷன் போஸ்டரில் உள்ளது.

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையின் இடையில் ’தலைவா’ என்ற வார்த்தையும் உள்ளது ரஜினி ரசிகர்களுக்கு சரியான விருந்து. இந்த மோஷன் போஸ்டர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை இந்த மோஷன் போஸ்டரின் வீடியோ பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன் பிறந்த நாளில் கமலஹாசனின் டுவிட்டர் பக்கத்தில் ரஜினி படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி இருப்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

பட்டப்பெயர், பட்டாசு வேண்டாம்: தொண்டர்களுக்கு உதயநிதியின் கண்டிப்பு அறிக்கை

0

பட்டப்பெயர், பட்டாசு வேண்டாம்: தொண்டர்களுக்கு உதயநிதியின் கண்டிப்பு அறிக்கை

திமுக இளைஞரணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் விபரம் வருமாறு:

மதவெறி கூட்டத்துக்குத்‌ தமிழ்‌ மண்ணில்‌ அறவே இடமில்லை என்பது நாம்‌ அறிந்ததே. இது, அந்த கூட்டத்துக்கும்‌ தெரியும்‌. ஆனால்‌ நம்‌ பெருமித அடையாளங்கள்‌ பற்றி உண்மைக்கு மாறான தகவல்களைத்‌ திரித்து பிரச்சாரம்‌ செய்வதன்மூலம்‌ இங்கு தங்களுக்குச்‌ செல்வாக்கு இருப்பதுபோன்ற ஒரு மாயத்‌தோற்றத்தை ஏற்படுத்தும்‌ வேலைகளில்‌ இறங்கியுள்ளனர்‌. இதற்கு மாநிலத்தில்‌ ஆளும்‌ கையாளாகாத அடிமை அரசும்‌ துணை போவதுதான்‌ வேதனை

இந்த சூழலில்‌ பொய்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌ மதவெவறி கும்பலுக்கு நாமும்‌ தீனி போட்டுவிடக்கூடாது என்பதே என்‌ வேண்டுகோள்‌. சில தொலைக்காட்சிகளில்‌, திமுக சம்பந்தப்பட்ட சுவராட்டிகளில்‌ மூத்த தலைவர்களின்‌ புகைப்பபங்களைவிட உதயநிதியின்‌ புகைப்படமே பிரதான இடம்பிடிக்கிறது. இதற்கு யார்‌ காரணம்‌’ என்று பரபரப்பாக விவாதிக்கிறார்கள்‌

இதுபோன்ற செய்திகள்‌, இந்த ஆட்சிகளின்‌ அவலத்தை திசை திருப்ப நடக்கும்‌ வேலையேத்தவிர, இதில்‌ ஆக்கப்பூர்வமான அறிவுபுகட்டும்‌ பணி துளியும்‌ இல்லை என்பது உங்களுக்கே தெரியும்‌. இருந்தாலும்‌ நாமும்‌ கட்டுப்பாட்டுடன்‌ நடந்துகொள்வது அவசியம்‌. இது, உங்களுக்கு நான்‌ ஏற்கெனவே சொன்னதுதான்‌. இருந்தாலும்‌ உறுதியாகவும்‌ இறுதியாகவும்‌ மீண்டும்‌ நினைவுபடுத்துகிறேன்‌

இனி. நான்‌ சம்பந்தப்படாத, நான்‌ கலந்துகொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ்‌ அறிவிப்புகளிலோ, சுவரராட்டிகளிலோ, அழைப்பிதழ்களிலோ என்‌ புகைப்படத்தைக்‌ கழகத்தினர்‌ யாரும்‌ பயன்படுத்தக்கூடாது எனக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. பெரியார்‌, அண்ணா, கலைஞர்‌, பேராசிரியர்‌, கழகத்‌தலைவர்‌ போன்ற நம்‌ முன்னோடிகளின்‌ புகைப்படங்கள்தான்‌ இடம்பெற வேண்டும்‌

இதேபோல்‌, “முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌” என்பவர்‌ ஒரே ஒருவர்தான்‌. அப்படிஒயாரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைக்கு நிகராக வேறொருவரை நம்மால்‌ காட்டிட முடியுமா? உண்மை இப்படியிருக்கையில்‌ என்‌ பெயருக்கு முன்னால்‌, “மூன்றாம்‌ கலைஞர்‌, திராவிட கலைஞர்‌, திராவிட தளபதி, இளம்‌ தலைவர்‌” போன்ற பட்டப்பெயர்கள்‌ இடுவதை எந்தவகையில்‌ சேர்ப்பது என்றே தெரியவில்லை. இப்படி பட்டப்‌பெயரிட்டு விளிப்பதால்‌, “நாளையிலிருந்து நான்‌ என்ன கலைஞராகிவிடப்போகிறேனா? கலைஞருக்கு நிகர்‌ கலைஞர்‌ மட்டுமே, நம்‌ தலைவருக்கு நிகர்‌ தலைவர்‌ மட்டுமே

இனி, இதுபோன்ற தர்மசங்கடங்களுக்கு என்னை ஆளாக்கமாட்டீர்கள்‌ என நம்புகிறேன்‌. நான்‌, “உங்களில்‌ ஒருவனாக, உங்களின்‌ மனதுக்கு நெருக்கமான உதயநிதியாகவே எப்போதும்‌ இருக்கவிரும்புகிறேன்‌. அதனால்‌ தயவுசெய்து பட்டப்பெயர்களை தவிர்க்குமாறும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. இதேபோல, நான்‌ நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும்‌ நிறுத்தவேண்டும்‌. என்‌ வருகையை மக்களுக்கு உணர்த்தும்‌ வகையில்‌ செலவு செய்தே ஆகவேண்டும்‌ என நீங்கள்‌ நினைத்தால்‌, பட்டாசு வாங்க ஆகும்‌ பணத்தை என்‌ முன்னிலையில்‌ ஏழை எளிய மக்களின்‌ அத்தியாவசிய‌ தேவைகளுக்குக்‌ கொடுத்துதவுங்கள்‌. அதுவே நம்‌ மனதுக்கு நிறைவான கொண்டாட்டமாக அமையும்‌

மேலும்‌ கழகக்‌கொடி கட்டுவதைக்கூட காவல்துறையின்‌ அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாதவகையில்‌ அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. ஃப்ளெக்ஸ்‌ பேனர்களை அறவே தவிர்க்கவும்‌” என்ற நம்‌ கழகத்‌தலைவரின்‌ அறிவுறுத்தலை கடைக்கோடி தொண்டர்கள்வரை கட்டளையாக ஏற்றுக்‌ கடைப்பிடிப்பதை நினைத்து பருமையடையும்‌ நான்‌, மேற்கண்ட என்‌ வேண்டுகோள்களையும்‌ ஏற்றுக்‌கொண்டு நிறைவேற்றுவீர்கள்‌ என நம்புகிறேன்‌

“ஏற்கெனவே பேனர்‌ வேணாம்னு சொல்லிட்டீங்க. இப்ப, பட்டாசு கூடாதுங்குறீங்க. பட்டப்பேரையும்‌ தவிர்க்க சொல்றீங்க, கூடுதலா போட்டோவே வேண்டாம்ங்கிறீங்க. நீங்க வர்றதை அப்புறம்‌ நாங்க எப்படித்தான்‌ கொண்டாடூறது?” என்று உரிமையுடன்‌ கேள்வி எழுப்பும்‌ உங்களின்‌ மனக்குரலை என்னால்‌ கேட்க முடிகிறது. உங்களை பற்றி நானும்‌ என்னைப்பற்றி நீங்களும்‌ புரிந்துகொள்ள, பகிர்ந்துகொள்ள இந்த பட்டாசு, பட்டம்‌, புகைப்படம்‌ போன்றவை தேவையா என்ன?

பொய்யர்களின்‌ இரைச்சல்‌ அதிகரித்துள்ள இந்த விஷச்சூழலில்‌ சமூகநீதியை, இனத்தை, பண்பாட்டை, மொழியைக்‌ காக்கவேண்டிய இடத்திலுள்ள நாம்‌, இதுபோன்ற தேவையற்ற விளம்பரங்களைத்‌ தவிர்த்து ஆக்கப்பூர்வமாகக்‌ கடமையாற்றுவோம்‌

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டம்: முக ஸ்டாலின் முக்கிய அறிக்கை

0

முக ஸ்டாலினின் மிசா சிறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டங்களை தவிர்க்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. இதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தன்மான – அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. எனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் இந்த நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிவிட்டது; அவ்வளவு தான். பயனில் சொல் பாராட்டுவாரை பதர்தான் என்றார் அய்யன் திருவள்ளுவர். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவரின் அறிவுரைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்வோம். மறப்போம், மன்னிப்போம்! இது தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள். பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது

இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்