நீண்ட இடைவேளைக்குப்பின் பொது நூலகங்கள் இன்று திறப்பு!!

0
98

மாநிலம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குபின் பொது நூலகங்கள் இன்று திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டு வாசகர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் பொது நூலகங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பகுதி நேர நூலகங்கள் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நூலகங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்,

  • நூலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து பணி நாள்களிலும் வாசகர்கள் பயன்பாட்டிற்கு நூலகங்கள் திறக்கப்படும்.
  • நூலகத்திற்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்து கிருமிநாசினி வழங்க வேண்டும்.
  • நூலகத்திற்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும்.
  • புத்தகம் வாசிப்பு பிரிவில் இருப்பவர்கள் புத்தகங்கள், மடிக்கணினி போன்றவற்றை பரிமாறிக்கொள்ள அனுமதி கிடையாது. மற்ற பிரிவுகளுக்கு அந்த பொருட்களை கொண்டு செல்லவும் கூடாது.
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
  • தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது. மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து இன்று முதல் ஒவ்வொரு தனிமனிதனும் பாதுகாப்போடு நூலகத்திற்கு வந்து செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K