புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!!

0
37

புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!!

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளரை அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எல்.எஸ்.ஜி எனப்படும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அறிமுகமானது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆன்டி பிளவர் அவர்கள் செயல்பட்டு வந்தார். பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மார்கல் அவர்களும் பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு அதாவது 2022ம் ஆண்டு பிளே ஆப் சுற்றில் எலிமினேடீடர் சுற்றில் தோல்வியடைந்து வெளியேஇயது. அதே போல நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது.

இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு தற்போதைய தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை அணி நிர்வாகம் நியமித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை நாட்டை சேர்ந்த ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் லாங்கர் அவர்கள் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆவார் ஆஸ்திரேலிய அணியில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது. ஆனால் அவரை லக்னோ அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்த லக்னோ அணியின் உரிமையாளர் இவரால் அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் உண்டாகும் என்று கூறியுள்ளார்.