ஜூலை 5 ஆம் தேதி அடுத்த சந்திர கிரகணம் ! எந்த நாடெல்லாம் இந்த கிரகணத்தை காணப்போகிறது தெரியுமா?

0
69

கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு கிரகணங்களை உலகம் சந்தித்த நிலையில் தற்பொழுது மூன்றாவது கிரகணம் நாளை நிகழ உள்ளது.ஜூன் 5 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்ததை அடுத்து ஜூன் 21 தேதி சூரியகிரகணம் நிகழ்ந்தது.இதனை தொடர்ந்து நாளை ( ஜூலை 5) சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

நாளை நிகழ உள்ள இந்த சந்திர கிரகணம் இந்த ஆண்டின் மூன்றாவதாக நிகழ உள்ள சந்திர கிரகணம் ஆகும். மேலும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சந்திர கிரகணமும் இரண்டாவது சந்திர கிரகணம் ஜூன் 15 ஆம் தேதி நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை(ஜூலை 5 ) நிகழவிருக்கும் சந்திர கிரகணம் புறநிழல் சந்திர கிரகணம் ஆகும்.இந்த கிரகணம் நிகழும்போது சூரியன்,பூமி,சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் இருப்பதில்லை.இந்த கிரகணமானது 8.37 தொடங்கி 11.22 க்கு முடிவடையும்.காலை 9.59 மணி அளவில் அதிக அளவு நிலவு மறைப்பு என்பது நிகழும்.இந்த கிரகணம் சரியாக 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு நிகழும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த கிரகணம் இந்திய நேரப்படி காலையில் நடைபெறுவதால் இதனை இந்தியாவில் கான இயலாது.ஆனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா,ஆப்ரிக்கா , ஐரோப்பிய நாடுகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K