வெறும் 1/2 மணி நேரத்தில் நெஞ்சு சளி கரைந்து போக.. இந்த சூப் செய்து சாப்பிடுங்கள்!!

0
575
Make this soup and eat it to dissolve chest mucus in just 1/2 hour!!
Make this soup and eat it to dissolve chest mucus in just 1/2 hour!!

இன்று நெஞ்சு சளி தொந்தரவால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மார்பு பகுதியில் அதிகப்படியான சளி இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.எனவே நெஞ்சு சளியை கரைக்க நாட்டு கோழியில் காரசாரமான சூப் செய்து குடியுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)இஞ்சி
2)மஞ்சள்
3)பூண்டு
4)தக்காளி
5)உப்பு
6)வர கொத்தமல்லி தூள்
7)எண்ணெய்
8)சின்ன வெங்காயம்
9)நாட்டுக்கோழி
10)மிளகாய் தூள்
11)மல்லித்தழை

செய்முறை விளக்கம்:-

முதலில் 1/4 கிலோ நாட்டு கோழி இறைச்சி வாங்கி வந்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.அதேபோல் நான்கு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு 10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு படுத்துங்கள்.

அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.அதற்கு அடுத்து இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

அதற்கு அடுத்தபடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கி வந்ததும் நாட்டு கோழி துண்டுகளை சேர்த்து கிளறவும்.

பிறகு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்குங்கள்.பிறகு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கோழி இறைச்சி வெந்து வரும் வரை கொதிக்கட்டும்.இறுதியாக மல்லித்தழைகளை தூவி இறக்கினால் நெஞ்சு சளியை கரைத்து தள்ளும் நாட்டு கோழி சூப் தயார்.

Previous articleவீங்கிய கண்கள் ஒரு மணி நேரத்தில் நார்மலாக.. இந்த பேஸ்டை கண்களை சுற்றி தடவுங்கள்!!
Next articleமுகத்தை ஜொலிக்க செய்ய இனி கெமிக்கல் புராடெக்ட் வேண்டாம்!! 2 பொருள் இருந்தால் இனி நாமே க்ரீம் செய்யலாம்!!