தமிழில் டப்பிங் இல்லாமல் அப்போவே ஹிட் அடித்த திரைப்படம்

0
8354
Maro Charitra
Maro Charitra

தமிழில் டப்பிங் இல்லாமல் அப்போவே ஹிட் அடித்த திரைப்படம்

தற்போது இருப்பது போல 1970 மற்றும் 80 கால கட்டங்களில் வேற்று மொழி படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியதாக ஆதரவு இருந்ததில்லை. ஆனால் அந்த சூழலிலேயே டப் செய்ய படாமல் தமிழில் வெளியான மரோசரித்ரா தெலுங்கு திரைப்படம் ஹிட் அடித்தது.

Maro Charitra (மரோசரித்ரா):

1978 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் தான் மரோசரித்ரா. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன்,சரிதா மற்றும் மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். நடிகை சரிதா இந்த படத்தின் மூலமாக அறிமுகமானார். நடிகை என்றால் நிறம், உடலமைப்பு இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கணம் இருந்த காலத்தில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட சரிதாவை இயக்குனர் கே பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பையனுக்கும் தெலுங்கு பெண்ணுக்கும் நடக்கும் காதலையும், அதனால் உருவாகும் பிரச்சனைகளையும் மையமாக வைத்தே இந்த படமானது எடுக்கப்பட்டிருக்கும். இயக்குனர் கே.பாலச்சந்தரின் காட்சியமைப்பு, எம்.எஸ்.வியின் இசை என அனைத்தும் இப்படத்திற்கு பலமாக இருந்தது.

இந்த திரைப்படமானது மலையாள மொழியில் திரக்கள் எழுதிய கவிதா எனும் பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் தமிழில் இத்திரைப்படம் டப்பிங் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக தெலுங்கு பதிப்பே சென்னை மற்றும் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியதால் தமிழில் மொழிமாற்றம் செய்யும் முடிவானது கைவிடப்பட்டது

அடிப்படையில் இது ஒரு தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இல்லை. அந்த வகையில் இந்த படமானது டப்பிங் இல்லாமல் சென்னை உள்ளிட்ட இடங்களில் 500 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்காக இயக்குனர் பாலசந்தர் அவர்களுக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் 100 சிறந்த திரைப்படத்தின் பட்டியலில் இந்த திரைப்படமும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.