அதுவே உண்மையான அஞ்சலி! டிடிவி தினகரன் அதிரடி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தி இருந்தார்கள். அந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அத்துடன் பலரும் படுகாயம் அடைந்து இருந்தார்கள்.

அதற்கு இன்றைய தினம் மூன்றாம் வருட நினைவு நாள் என்ற காரணத்தால், தமிழக அரசின் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுத் துறை இடம் ஒப்படைக்கப்பட்ட இருக்கின்ற வழக்குகள் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக பதியப்பட்டு இருக்கின்ற வழக்குகளில் தவிர, மற்ற வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

அத்துடன் காவல்துறை காரணமாக கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிர் இழந்த காரணத்தால், அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. அதோடு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்த சூழலில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 13 பேருக்கு மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். அதோடு இழப்பீடுகள் வழங்கப்படுவது ஆறுதலை கொடுத்தாலும் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி வழங்குவதும் எந்தக் காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறக்காமல் இருப்பதே கொல்லப்பட்ட 13 நபர்களுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று அவர் தெரிவித்திருக்கிறார்.