பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! நீங்கள் அறியதவை இதோ உங்களுக்காக!

0
90

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! நீங்கள் அறியதவை இதோ உங்களுக்காக!

பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.

100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்துவதில், பீன்ஸ்க்கு அதிக பங்கு உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்

பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாது உடலுக்கு வலுவைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

பீன்ஸில் உள்ள மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

 

author avatar
Parthipan K