தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா?

0
38

 

தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா…

 

இந்தியா முழுவதும் கிலோ 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தக்காளி தற்பொழுது ஒரு மாநிலத்தில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டா வருகின்றது.

 

கடந்த வாரம் இந்தியா முழுவதிலும் கிலோ 200 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் தான் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் பகுதியில் இருந்து சித்தூர் சந்தைக்கு தற்பொழுது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் மொத்த விலை குறையத் தொடங்கியுள்ளது.

 

ஆசியாவின் மிகப் பெரிய தக்காளி சந்தையான மதனப்பள்ளி சந்தையில் இருந்து மற்ற சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழ்நாடு, மேற்குவங்கம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆந்திர மாநிலம் சித்தூரில் மொத்த விலையில் தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்ட சந்தையில்ஜிருந்து தினமும் 35 முதல் 40 லாரிகளில் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. சித்தூர் மாவட்டத்தில் இருந்து வேலூர், சென்னை ஆகிய பல பகுதிகளுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதையடுத்து தமிழகத்திலும் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.

 

தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து மேலும் தக்காளி வரத்து தமிழகத்திற்கு அதிகரித்தால் மேலும் தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.