திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநீர் குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்!

0
122
Movie style stolen juveniles! Betrayed CCTV! The public who took the revolution!
Movie style stolen juveniles! Betrayed CCTV! The public who took the revolution!

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநி குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்!

சென்னையில் கே.கே நகர் பகுதிகளில் பழைய சினிமா பாணியில் இளநீர் திருடி தனியாக இளநீர் கடை வைத்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 80 களில் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியான கோவில்காளை என்ற ஒரு படத்தில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு இளநீர் கடை வைத்து இருப்பார்.

அந்த கடையில் இருந்து கயிறு மூலம் செந்தில் மற்றும் வடிவேலு ஆகியோர் இளநி குலைகளை திருடி ஒரு தனி கடை அமைத்து விற்கும் படி அந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த நகைசுவையை பார்த்தால் இன்றும் பலர் வாய்விட்டுச் சிரிப்பார்கள். தற்போது  அதைப்போல சென்னை கே.கே நகர் பகுதியில் சாலையோரமாக இருக்கும் இளநீர் கடையிலிருந்து இளநீர் குலைகளை திருடி விற்று வந்தவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப்படி ஒரு ருசிகரமான சம்பவத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சென்னை கே.கே நகர் 80 அடி சாலையில் சாலையோரமாக கடந்த 25 ஆண்டுகளாக லிங்கம் என்பவர் இளநீர் கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டிற்கு செல்லும்போது இளநீர் குலைகளை தார்பாலின் போட்டு மூடி வைத்து விட்டு அவர் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மட்டும் ஒரு நூறு முதல்  நூற்றைம்பது இளநிகள் மட்டும் திருடப்பட்டு வந்தது என்பதை கவனித்து அவர், சரி யார் என்று பார்க்கலாம் என்று அருகில் சிசிடிவி பொருத்தி விட்டார். இதன் காரணமாக அவர் அதிர்ச்சி அடைந்து இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

யார் தான் அப்படி எடுத்து போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அவர் இந்த சிசிடிவியை வைத்துள்ளார். அதில் ட்ரை சைக்கிளில் ஒரு நபர் இளநீர் குலைகளை திருடிச் செல்வது தெரிந்தது. ஆனால் யார் திருடுகிறார்கள் என்பது தெரியவில்லை. தற்போது இளநீரை திருடியதாக சாலிகிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை பிடித்து கே.கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கே.கே நகர் பகுதியில் இருந்த இளநீர் குலைகளை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. எனவே லிங்கம் அளித்துள்ள புகாரின் பேரில் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் நீதிமன்ற காவலின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.