அமெரிக்காவின் டைம் நாளிதழில் இடம்பெற்ற பிரதமர் மோடியின் பெயர்!

0
78

கடந்த 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘டைம்’ நாளிதழ் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த இதழ் சார்பில் ‘டைம் 100’ என்ற பெயரில் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களின் பெயரை பட்டியலாக வெளியிடுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பட்டியலை டைம் இதழ் நேற்று வெளியிட்டது.  முன்னோடிகள், கலைஞர்கள், தலைவர்கள், முக்கியமானவர்கள், பிரபலமானவர்கள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் உலகின் உலகின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்களை டைம் இதழ் பட்டியலிட்டுள்ளது. 

இந்த இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். இதில் தலைவர்கள் பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2014, 2015 ,2017 ஆம் ஆண்டுகளில் வெளியான டைம் 100 பட்டியலில் பிரதமர் மோடி இடம் பெற்றிருந்தார்.தற்போது நான்காவது முறையாக டைம் இதழ் அவரை கௌரவப்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K