நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!

0
63

இந்தியாவில் நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நாய் தொடரின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததைவிட மிகவும் பயங்கரமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.இதனால் கடந்த 10 தினங்களாக நாளொன்றுக்கு இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சமாக அதிகரித்து வந்தது அதே சமயம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாள்தோறும் புதிய சாதனையாக 3600 ஆக இருக்கிறது. இதனால் அரசாங்கங்கள் சற்றே திணறிப்போய் தான் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் இந்த நோய் தொற்று பாதிப்பு குறித்த அறிவிப்பை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி இந்தியாவில் இதுவரையில் நான்கு லட்சத்தி 1993 பேருக்கு இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல மூன்று ஆயிரத்து 523 பேர் சிகிச்சை பலனில்லாமல் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி எட்டு பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.96 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதுவரையில் சிகிச்சை முடிந்து ஒரு கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் இதுவரையில் மொத்தமாக இந்த நோய் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 853 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் இந்த நோய்களுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கையும் 32 லட்சத்து 68 ஆயிரத்து 710 ஆக அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த விபத்தில் இதுவரை 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 பேர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.