நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் புதிய கட்டுப்பாடுகள்! ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

0
52

தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் இதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது இந்த தொற்று பரவ காரணமாக, தமிழக மக்கள் எல்லோரும் பீதியில் இருந்து வருகிறார்கள். அதோடு தமிழக அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் நோய் தொற்று காரணமாக, 16 ஆயிரத்து 665 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 ஆக அதிகரித்திருக்கிறது, நேற்று இந்த தொடரில் இருந்து 15 ஆயிரத்து 114 பேர் குணம் அடைந்ததை தொடர்ந்து இதுவரையில் இந்த தொட்டியில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 33 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் இந்த நோயினால் 98 பேர் பலியாகி இருக்கிறார்கள் இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 826 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தோற்றுப் பரவல் அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பாதிப்பு அதிகமாக இருக்கின்ற ஆறு மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் என்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு அதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.