எகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை

Kovai Selvaraj

எகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை சென்னை நாளை காலை கோவை செல்வராஜ் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைவதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.முன்பெல்லாம், ஒவ்வொரு வீடுகளிலும், சாமி படத்துக்கு பக்கத்திலேயே எம்ஜிஆர் போட்டோவையும் கொங்கு மக்கள் வைத்துக் கொள்வார்களாம். கொங்கு மண்டலத்தில் எம்ஜிஆர் செல்வாக்கு அந்த அளவுக்கு … Read more

கருகும் தாமரை.. சடசடவென சரியும் விக்கெட்டுகள்.. அண்ணாமலை தான் காரணமா? கதிகலங்கும் பாஜகவினர்

Annamalai IPS

கருகும் தாமரை.. சடசடவென சரியும் விக்கெட்டுகள்.. அண்ணாமலை தான் காரணமா? கதிகலங்கும் பாஜகவினர் சென்னை தமிழக பாஜகவில் சலசலப்புகள் கூடி வரும் நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், சர்வாதிகார போக்குடன் அமைந்து வருவது, அக்கட்சியினருக்கு பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. அதல பாதாளத்தில் தொங்கி கொண்டும், திராவிட மண்ணில் யாருக்குமே தெரியாமல் இருந்த பாஜக என்ற கட்சியை, தமிழக மக்களின் கவனத்துக் கொண்டு சென்றது தமிழிசை சவுந்தராஜான் என்பதை மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது. இதற்கு … Read more

கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. உணவில் ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்த மனைவி..!

கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. உணவில் ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்த மனைவி..!

கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவர் கமல்காந்த். இவருக்கும் கவிதா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குழந்தைக்காக மறுபடியும் ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்துள்ளனர். அப்போது, கவிதாவிற்கும் கமல்காந்தின் நண்பர் ஹிடேஷ்க்கும் காதல் மலர்ந்துள்ளது. … Read more

பட்டபகலில் வீட்டில் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மும்பையில் நடந்த கொடூரம்..!

பட்டபகலில் வீட்டில் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மும்பையில் நடந்த கொடூரம்..!

பெண்ணின் வீட்டிற்கு நுழைந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு நுழைந்தனர். அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை கூர்மையான ஆயுதங்களால் கைகள், கழுத்து, மார்பு பகுதியில் தாக்கி சிகிரெட்டால் சூடு … Read more

மாண்டஸ் என்ற பெயரில் புதிதாக உருவாகும் புயல்! சென்னை வானிலை ஆய்வு மையம்! 

A new storm named Mantus! Chennai Meteorological Center!

மாண்டஸ் என்ற பெயரில் புதிதாக உருவாகும் புயல்! சென்னை வானிலை ஆய்வு மையம்! கடந்த மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அதன்  காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் கடந்த வாரம் தான் மழை சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே புதிய … Read more

அரசின் PMSBY திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும் ! முழு விவரம் இதோ!

அரசின் PMSBY திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும் ! முழு விவரம் இதோ!

காப்பீட்டு தொகையை பெறுவதற்கு நாமினி பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை, ஆதார் அட்டை, நாமினியின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாட்டில் பலவகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளது, பொதுவாக காப்பீட்டு திட்டடங்கள் நமது எதிர்கால நிதி தேவைக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைகின்றது. வங்கிகள் அல்லது பல நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான முதலீட்டு விருப்பங்களை நமக்கு வழங்குகிறது, இந்த நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அரசு வழங்கும் முதலீட்டு … Read more

பணிவு வேண்டாம், துணிவு போதும்..ஜெ நினைவு தினத்தில் தெலுங்கானா ஆளுநர் பதிவு..!

பணிவு வேண்டாம், துணிவு போதும்..ஜெ நினைவு தினத்தில் தெலுங்கானா ஆளுநர் பதிவு..!

மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு தினத்தையோட்டி தெலுங்கானா கவர்னர் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2016ம் ஆண்டு உடல்நலகுறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இந்நிலையில், அவரது 6ம் ஆண்டு நினைவு நாள் இன்ரு அனுசரிக்கப்படுவதால் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெ நினைவு நாளில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தனது டிவிட்டர் … Read more

பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் மீது மோதிய லாரி.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா கிராமத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக லாரி ஒன்று வந்தது.தீடிரென கட்டுபாட்டை இழந்த அந்த லாரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மோத சென்றது. அங்கிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்ற போது சுமார் 20 பேர் மீது லாரி மோதியது.இதில், பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் லாரி சக்கரத்தில் சிக்கி … Read more

போக்சோ பதியனுமா? காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு அளித்த டிஜிபி..!

போக்சோ பதியனுமா? காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு அளித்த டிஜிபி..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு இயற்றப்ட்ட இந்த சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ … Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புவர். 1930 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. உலகக்கோப்பை போட்டில் சில சுவராசிய சம்பவங்களும் சாதனைகளும் அவ்வபோது நடைபெறும். கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் மரடோனா 1986-ம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக உலக கோப்பை போட்டியில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்தார். அந்த … Read more