தமிழகத்தில் ஒரே நாளில் 47பேருக்கு நோய்த்தொற்று பரவல்!

0
65

கடந்த 2 ஆண்டு காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது .

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் பல வல்லரசு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்து வந்த நோய்த்தொற்று பரவல் சமீபகாலமாக தமிழகத்தில் சற்று குறைய தொடங்கியது. இதனால் வழக்கம்போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவை தொடங்கியிருந்தனர்.

இயல்புநிலை மெல்ல, மெல்ல, திரும்பி வந்த சூழ்நிலையில் திடீரென்று நோய் தொற்று தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

இந்தநிலையில், நேற்று புதிதாக 18,445 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 ஆண்கள் 22 பெண்கள் உட்பட 47 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 25 பேர் உட்பட 10 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பதிவாகியிருக்கிறது. 28 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 5 பேர் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 4 பேர் நேற்றையதினம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அதோடு 11 மாவட்டங்கள் மட்டுமே நோய் தொற்று இல்லாத மாவட்டங்களாக உருவாகியிருக்கின்றன.

46 பேர் நோயிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியிருக்கிறார்கள் இதுவரையில் தமிழ்நாட்டில் 34,15,440 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.