தமிழகத்தில் மட்டும் கோவில் திறப்பு இல்லை!தமிழக அரசு விளக்கம்

0
81

தமிழகத்தில் இன்று கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவின்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திருமண விழாக்கள், திருவிழாக்கள் என அனைத்திற்கும் பாரபட்சமின்றி மத்திய அரசு தடை விதித்திருந்தது. அதேபோல்,

மக்கள் அதிகம் செல்லும் இடங்களான மால்கள், கோவில்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவைகளும்  மூடப்பட்டன. இதையடுத்து இந்தியாவில் இந்து அமைப்பினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் தொடர்ந்து மத வழிபாட்டிற்காக கோயில்களை திறக்கக்கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜூன் எட்டாம் தேதியான இன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருவதுடன், பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோவில்களை திறப்பது குறித்து பரிசீலனை செய்து அதன்பின் திறக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் நாட்டின் பிற பகுதிகளைப் போல் மால்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இன்று முதல் இயக்கப்பட உள்ளது. ஆனால் அவை இவ்வாறுதான் இயக்கப்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை நேற்று தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

அதன்படியே, மால்களும், ஹோட்டல்களும் வழிநடத்தப்பட வேண்டும். சென்னை, கோவை உள்ளிட்ட மெட்ரோ சிட்டிகளில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வணிக வளாகங்கள்,மால்கள்  ஹோட்டல்கள் என அனைத்தும் திறக்கப்பட்டு  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டாலும், வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின், கட்டுப்பாடுகளுடனே  மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K