உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ?

0
59

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ?

நம் மக்களுக்கு பொதுவாகவே ஓர் எதிர்பார்ப்பு உண்டு ,எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒரே நாளில் ஒரே மாத்திரையில் சரியாக வேண்டும் என்றே பேராசைப்படுவார்கள்.உடல் பருமன் விஷயத்திலும் அப்படித்தான்.தொடர்ச்சியாக உடல் எடை குறைய வேண்டுமென்றால் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிர்சியுமே ஒரே தீர்வு.மருந்து மாத்திரைகளை தவிர்த்து, உடல் பருமனுக்கான சிகிச்சை என்று பார்த்தல் அறுவைச் சிகிச்சை முறையைச் சொல்லலாம். தாங்களாகவே உடல் எடையை குறைக்க முடியாதவர்கள்,கடுமையான உடல் பருமனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அறுவைச் சிகிச்சை முறை பயன்படுகிறது.குறிப்பாக பி.எம்.ஐ  அளவீடு அல்லது அதற்கு மேல் கொண்டவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை முறை கை கொடுக்கிறது.

           இரைப்பை பைபாஸ்,லேப்ரோசகோபிக் கேஸ்டிறிக் பேண்டிங் ஆகிய இரண்டு சிகிச்சை முறைகள் தற்போது பின்பற்றபடுகின்றன.

இரைப்பை பைபாஸ் முறையில்,உட்கொள்ளப்படும் உணவில் குறைந்த அளவு உணவே, குடல் பகுதியால் உறிஞ்சிக் கொள்ளப்படும் வகையில், ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியை பைபாஸ் செய்து விடுவார்கள்.இதனால், உண்ணும் உணவில் பெரும்பகுதி உறிஞ்சிக்கொள்ளப்படாமல் தவிர்க்கப்படும்.இதனால் உடல்எடை கூடாமல் தடுக்கமுடியும்.

 இரண்டாவது முறையில், அறுவைச்சிகிச்சை மூலம் வயிற்றின் கொள்ளளவு குறைக்கப்படும்.இதனால் குறைந்த அளவே சாப்பிட முடியும்.

இந்த அறுவை சிகிச்சை மூலமாக ,40 முதல் 50 வரை எடையைக் குறைக்க முடிகிறது என்பதால், கடுமையான உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரிதும் கை கொடுக்கிறது. பாதிக்கபட்டவர்கள் இளம் வயதினராக இருக்கும்பட்சத்தில் ,அவருக்கு இருக்கும் சர்க்கரை நோய்,ரத்தகொதிப்பு,மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் முழுமையாக விடுபட,அறுவைச்சிகிச்சை முறைகள் உதவுகின்றன.

டைப் 2 வகை சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு இவை நல்ல தீர்வை வழங்குகின்றன. ஆனால், இதுபோன்ற அறுவைச்சிகிச்சைகளால், உணவின் மூலமாகக் கிடைக்கும் சில முக்கியமான ஊட்டச்சத்துகளையும் விட்டமின்களையும் உறிஞ்சிக்கொள்ளமுடியாமல் போகலாம். எனவே இவர்கள், பி-காம்ப்ளெக்ஸ் போன்ற வைட்டமின் மாத்திரைகளை, வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளவேண்டி வரலாம்.

       மேற்சொன்ன சிகிச்சை முறையைத் தாண்டி, நடத்தை முறை மாற்றங்கள் சிலருக்கு பெரிதும் பலன் அளிக்கின்றன.ஆங்கிலத்தில் இதை behaviour modification என்பார்கள். உணவுக்கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சி குறித்த மக்களின் எண்ணத்தை மாற்றி அமைப்பதே இதன் அடிப்படை.

author avatar
Parthipan K