அவர் மட்டும் ஒத்துழைத்து இருந்தால் ஒரு பெரிய ஸ்கோரை எட்டி இருக்கலாம்!

0
48

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த கிடைத்த வாய்ப்பு தொடர்பாக இலங்கை வீரர் ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் கொழும்பில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மிக எளிதாக வெற்றியை ருசித்தது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் 1-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இது தொடர்பாக இலங்கை அணியின் கருணரத்னே இது தொடர்பாக கூறுகையில், டாட் பந்துகளை விட நாங்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கு தான் முயற்சி செய்தும் எங்களுடைய பவுன்சர்களையும் எங்களுடைய வேகத்தையும் பயன்படுத்த நாங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தோம். இந்திய அணி ஒரு மிகச் சிறந்த அணி அவர்கள் எங்களை தாக்குவார்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் விக்கெட்டுகளை எடுத்திருந்தால் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க இயலும் என்று தெரிவித்திருக்கிறார். பவர் பிளேயில் நாங்கள் ஒரு விக்கெட்டை மட்டும் தான் எடுக்க முடிந்தது. இரண்டாவது அல்லது மூன்றாவது விக்கெட்டை நாங்கள் கைப்பற்றி இருந்தால் நிச்சயமாக ஆட்டத்தின் போக்கை மாற்றி இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய அனேக பேட்ஸ்மேன்களுக்கு நல்ல ஆரம்பங்கள் கிடைத்தது. ஆனால் அதனை பெரிய இன்னிங்ஸ் ஆக எங்களால் மாற்ற இயலவில்லை0 நாங்கள் பெரிய இன்னிங்க்ஸை விளையாட முயற்சி செய்தோம். 42 அல்லது 43 நான் உடனே செய்து கூட நான் அவரிடம் சில பெரிய ஷாட்களை அடிக்கலாமா என்று கேள்வி எழுப்பினேன். ஆனால் அவர் 45ஆவது ஓவர் வரை காத்திருக்க சொன்னார். அதிக நேரம் பேட் செய்ய முடிந்தால் நாங்கள் மிகப்பெரிய ரன்களை எடுப்பதற்குள் 300 அல்லது 650 ரன்களை அடிக்கும் திறன் இருக்கிறது இந்த போட்டியில் அதை தவற விட்டாலும் அடுத்த போட்டியில் நிச்சயமாக நாங்கள் அடிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார்.