ஓபிஎஸ் செய்த காரியத்தால் அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சை!

0
93

மூன்று தினங்கள் விடுமுறைக்குப் பின்னர் சட்டசபை இன்று மீண்டும் கூடியது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அதோடு முதல் நாளான இன்றைய தினம் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடை பெறுகின்றது. இந்த சூழ்நிலையில். சட்டப்பேரவையில் பொன்விழா கண்டிருக்கும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் அவை முன்னவரும் திமுக பொதுச் செயலாளரும், மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனை புகழ்ந்து, பாராட்டி, வாழ்த்தி உரையாற்றினார். அந்த சமயத்தில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த துரைமுருகன் கண்ணீர் சிந்தி அழுதார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றும்போது நூற்றாண்டு கண்ட இந்த சட்டசபையின் அரை நூற்றாண்டைக் கடந்த துரைமுருகன் அவர்கள் எனக்கு வழித் துணையாக இருந்து வருகின்றார். கட்சிக்கும், எங்களுடைய ஆட்சிக்கும், உறுதுணையாக எப்போதும் துரைமுருகன் இருந்து வருகின்றார் என ஸ்டாலின் உரையாற்றி இருக்கின்றார். இதனை கேட்ட துரைமுருகன் கண்ணீர் விட்டு மனம் உருகினார் என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் எப்போதுமே மிகவும் விறுவிறுப்பாக பேசக்கூடியவர் துரைமுருகன், ஆனாலும் அடுத்த நொடியே இனிமையாக பேசுவதற்கான ஆற்றலை அவர் பெற்றிருக்கிறார். சட்டசபையில் 50 வருடங்கள் எல்லோரையும் கவர்ந்து அனைவருடைய மனதிலும் இடம் பிடித்தவர் அமைச்சர் துரைமுருகன் என தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒபிஎஸ்.

ஆனால் அதிமுக எதிர்க்கட்சியாக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக சற்றே கலங்கிப்போய் தான் இருந்தது. அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் திணறி வருகின்றார் என்று சொல்லப்படுகிறது.அதோடு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட மாநில அரசின் பல குறை நிறைகளை எடுத்துக் கூறி உரையாற்றியபோது அதன் காரணமாக, ஏற்பட்ட பிரச்சனையில் அதிமுக வெளிநடப்பு செய்தது.

அதோடு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சிக்க வைக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது என்ற ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவை சார்ந்தவர்கள் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், சட்டமன்றத்தில் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் பாராட்டு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.