குறிஞ்சாக்கீரை தொக்கு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

0
88

குறிஞ்சாக்கீரை தொக்கு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள் :ஒரு கட்டு குறிஞ்சாக்கீரை , எட்டு மிளகாய் வற்றல் , எலுமிச்சை அளவு புளி, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய் .

செய்முறை :முதலில்  கடுகு மற்றும் வெந்தயத்தையும் ஆகிய இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதனை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு மிளகாய் வற்றல் மற்றும் புளியை ஆகிய இரண்டையும் ஊற வைக்க வேண்டும்.பின் குறிஞ்சாக்கீரை உடன் சேர்த்து அரைக்க வேண்டும். மேலும் தாளிக்கவாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த வைத்து உள்ள விழுதை போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்.

பின் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அது கெட்டியாக வந்த பிறகு பொடித்தவை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.சிறிது நேரம் ஆறிய பிறகு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம் இந்த தொக்குடன் சேர்த்து சாதம் மற்றும் தோசை ஆகியவை உண்ணலாம்.

author avatar
Parthipan K