பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
74
Passenger trains collide head-on! Increase in casualties!
Passenger trains collide head-on! Increase in casualties!

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்ற மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் தஹர்கி நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 03:28 மணிக்கு புறப்பட்டது. , ரைட்டி ரெயில் நிலையம்  அருகே இந்த ரெயில் 03.43 க்கு  ரெயில் தடம் புரண்டது. மேலும் ராவல்பிண்டியில் இருந்து வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் மோதி உள்ளது.

இந்த விபத்தில்  மில்லட் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன, ஐந்து பெட்டிகள் கவிழ்ந்தன, அதே நேரத்தில் சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன, மூன்று கவிழ்ந்தன, இதில் 31 பேர் பலியானார்கள்  100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்.

அவர்கள் அனைவரும் அருகில் உள்ள  மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.தடம் புரண்டதற்கும் அடுத்தடுத்த மோதலுக்கும் என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்கி  உயர் போலீஸ் அதிகாரி உமர் துஃபைல் கூறும் போது 40 உடல்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. ரயிலின் இடிபாடுகளில் 15 முதல் 20 பயணிகள் இன்னமும் சிக்கியுள்ளதாகவும், உதவிக்காக அழுகிறவர்களை மீட்க கனரக இயந்திரங்களை ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இறந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  காயமடைந்த 25 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கராச்சி, சுக்கூர், பைசலாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களில் பயணிகளுக்காக ஹெல்ப்லைன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தை ரெயில்வே அமைச்சர் அசாம் கான் சுவாதி பார்வையிட்டார்.

இந்த விபத்து நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை முடக்கி உள்ளது. பாகிஸ்தான் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக ஒரு தகவல் மையம்  அமைக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மதியம் 2 மணி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கோட்கியில் நடந்த பயங்கர ரெயில் விபத்தில் 30 பயணிகள் உயர் இழந்தது குறித்து அதிர்ச்சியடைந்தேன். ரெயில்வே அமைச்சரை சம்பவ இடத்திற்கு செல்லவும். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை உறுதிப்படுத்தவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

ரயில்வே பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடட்டும்  என கூறினார்.

மக்களே நாம் இயற்கையை பாதுகாக்காத செய்யலுக்குக்கான பலனை தற்போது அனுபவிக்கிறோம். ஒரு பக்கம் உலகநாடுகளை அச்சுறுத்தும் வைரஸ் தொற்றுகள், வண்ண வண்ண பூஞ்சைகள், இயற்கை சீர்கேடுகள், அழிவுகள், விபத்துக்கள் என பல வகையில் மனித உயிர்கள் மாண்டு போகின்றன.

எனவே, அனைவரும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நன்கு பாசமாகவும், அன்பாகவும், விரோதம் காட்டாமல் பழகிக் கொள்ளவும். ஏனெனில் நாம் அனைவரும் தொடர்ந்து இருப்போமா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. எனவே முடிந்தவரை அனைவரையும் மதித்து பழகுவோம் மக்களே.