புரட்டாசி மாதம் தொடங்க இருப்பதால் பனிக்கட்டி இல்லாத மீன்களை வாங்க மக்கள் ஆர்வம்!!

0
70

புரட்டாசி மாதம் நெருங்குவதால் ஞாயிற்றுக்கிழமையாக இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மீன்கள் விற்பனையில்
விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா ,தேவூர் அருகே உள்ள பகுதிகளில் கோனேரிப்பட்டியில் , புரட்டாசி மாதம் தொடங்குவதால் பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள மீன்களை, ஆற்றில் பிடித்து ஐஸ் கட்டி இல்லாமல் வினியோகம் செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்க இருப்பதால் ,ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று கோனேரிப்பட்டியில் வழக்கத்தைவிட மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இக்கடைகளில் எடப்பாடி, சங்ககிரி, தேவூர், குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி ,அம்மாபேட்டை, மூலபாதை ஆகிய பகுதிகளை சேர்ந்த அசைவ பிரியர்களுக்கு, பனிக்கட்டிகள் இன்றி விற்கப்படும் மீன்களை நேரடியாக பிடித்து  விர்க்கப்படுகிறது.  மக்கள் வரிசையில் காத்திருந்து ஜிலேபி, ரூபி, சென்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை வாங்கி செல்கின்றனர்.ஒரு கிலோ ரூபாய் 150 முதல் 300 வரை விற்கப்படுவதால் ,அதிக அளவில் மீன்கள் விற்கப்படுவதால் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

author avatar
Parthipan K