வில்லன் நடிகரின் அதிரடி செயலால் பாராட்டிய மக்கள்!

0
81
People praised by the action of the villain actor!
People praised by the action of the villain actor!

வில்லன் நடிகரின் அதிரடி செயலால் பாராட்டிய மக்கள்!

தமிழில் நான் ஈ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் கிச்சா சுதீப். இவர் கன்னட நடிகர் என்றாலும் தமிழில் அதுதான் முதல் படமாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு முடிஞ்சா இவன புடி, புலி மற்றும் பாகுபலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவரைப்போல பல படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் நமக்கு நம்ப முடியாத ஹீரோக்களாக சிலர் திகழ்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நம் தமிழ் உலகில் மிகப்பெரிய நடிகரான நம்பியார் கூட திரை திரைப்படங்களில் பயங்கர வில்லனாக நடித்து இருப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிகர். அவரை போல் ஒரு கதாபாத்திரத்தை யாரும் பார்க்க முடியாது என்பது போல் மிகவும் மென்மையானவர்.

அவரை இங்கு நினைவு கூர வேண்டும் என்பதனால் மட்டும் வில்லன் என்றாலே அவர் இல்லாமலா? அதேபோல இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை பல நடிகர்கள் செய்து வந்தாலும், மற்றொரு வில்லன் தெலுங்கு நடிகராக உள்ள சோனு சூட் கூட பல உதவிகளை செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இதைப்போல பலர் செய்தாலும் சிலரது உதவிகளும், மக்களுக்கு செய்யும் பணிவிடைகளும் யாராலும் மறக்கப்படுவதில்லை.

திரைத்துறை என்றாலே மக்களால் பெரிதும் கவரப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இதுபோன்ற ஒரு சமூக சேவை செய்யும் போது மக்களுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள். நம் நாட்டில் தமிழ் திரை உலகில் உள்ள நடிகர்கள் பலர் நடிகர்களாக இருந்தாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னால் அது முடியாது, இது முடியாது என்று அசால்டாக கூறும் நிலையில், இவர்களது இந்த உதவிகள், மிகப் பெரிய விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக செய்து முடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.

அப்படி அவர் செய்த ஒரு காரியம் தான் தனது சொந்த ஊரான, கர்நாடக மாநிலத்தில் உள்ள  சிவமோகாவில் ஓர் உள்ள ஒரு அரசு பள்ளியை சுதீப் தத்தெடுத்துள்ளார். இந்த பள்ளி 133 ஆண்டுகள் பழமையானது என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மிகவும் பழுதடைந்து மாணவர்களுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லாமல் காட்சி அளிக்கின்றது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் சுதீப் செய்து கொடுப்பதாக வாக்களித்துள்ளார்

மேலும் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார். இதற்காக அவரை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள். சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் அல்லவா அதுதான் மிகப்பெரிய மனசு.