வங்கியில் கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் கடனை செலுத்தும் பொறுப்பு யாருக்கு உள்ளது?

0
102

வீடு கட்டுவது முதல் கார், பைக், வாகனங்களை வாங்குவது வரை தற்போது அதிகரித்து விட்டது. கடன் வாங்கும்போது தங்களுக்கு பிறகு யார் இந்த கடனை செலுத்துவார்கள் என்று வாரிசுதாரரின் விவரங்கள் அனைத்தையும் வாங்கி நிர்வாகம் வாங்கி வைத்துக் கொள்ளும்.

ஆனாலும் கூட கடன் வாங்கியவர் உயிரிழந்து விட்டால் கடனை திரும்ப செலுத்த யார் பொறுப்பு என்று குழப்பம் இன்று வரையிலும் பலருக்கும் ஏற்படும். ஆகவே இந்த சமயத்தில் கடன் வாங்கியவர் உயிரிழந்து விட்டால் வங்கி கடனை யார் கட்ட வேண்டும் என இங்கே நாம் தெரிந்து கொள்வோம்.

வங்கிகள் கொடுக்கும் கடன்கள் அனைத்தும் ஒரே விதமான கடன்கள் கிடையாது பாதுகாப்பான கடன் மற்றும் பாதுகாப்பாற்ற கடன் என இரு வகையாக இருக்கிறது. வீட்டு கடன் வாகன கடன் உதவி தேவை பாதுகாப்பான கடல் பட்டியலிலும் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்டவை பாதுகாப்பற்ற கடன் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கின்றன.

வீட்டுக் கடன் வாங்கியவர் உயிரிழந்து விட்டால் இணை விண்ணப்பதாரர் தான் அந்த கடனுக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் முன்னதாக வங்கி நிர்வாகம் வாரிசுதாரருக்கு சட்டப்படி வங்கி

நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி வைக்கும். கால அவகாசம் வழங்கப்பட்ட பிறகும் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாவிட்டால் சிவில் நீதிமன்றம் கடன் மீட்பு தீர்ப்பாயம் இல்லையென்றால் sarfaest சட்டத்தின் கீழ் வீட்டை மீட்கும் உரிமை வங்கிக்கு இருக்கிறது. சொத்துக்கள் ஏலம் விடுவதன் மூலமாக வங்கி கடனை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளும்.

கடன் பெற்றவர் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார் என்று சொன்னால் உரிமை கோரல் தொகையை நாமினியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உரிய சட்ட நடைமுறைக்கு பின்னர் சட்டபூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்.

வீட்டுக் கடன் காப்பீடு இல்லாவிட்டால் இணை கடன் வாங்குபவர் சட்டப்பூர்வ வாரிசு அல்லது ஜாமீன் கையெழுத்து போட்டவர்களிடம் நிலுவைத் தொகையை வங்கி திரும்ப பெற இயலாது எனவும், சொத்தை கைப்பற்றி பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வங்கி நிர்வாகம் ஈடுபடும் எனவும், கூறப்படுகிறது.

வாகன கடன் செலுத்துதல்

வாகன கடனை எடுக்கும்போது ஒருவர் உயிரிழந்து விட்டால் இந்த கடனை திரும்ப செலுத்து பொறுப்பு குடும்பத்தாருக்கிருக்கிறது. காரை வைத்திருக்க விருப்பம் கொள்ளும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு நிலுவைத் தொகையை வங்கியில் மீண்டும் செலுத்த வேண்டும்.

ஒருவேளை சட்டபூர்வ வாரிசு நிலுவையில் இருக்கின்ற கடன் தொகையை மீண்டும் செலுத்த தவறினால் அந்த வங்கி காரை பறிமுதல் செய்து அதன் நிலுவைத் தொகையை ஏலம் விடுவதன் மூலமாக பெற்றுக்கொள்ளும்.

பாதுகாப்பற்ற தனிநபர் கடன், கிரெடிட் கார்டு பில்களை வங்கிகள் ரைட் ஆஃப் லிஸ்டில் இணைக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.