தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் விடுத்த முக்கிய கோரிக்கை!

0
80

7பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில், திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 நோய் தொற்று இருப்பவர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா என்பது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதன் காரணமாக, ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இது மிகப் பெரிய கவலையை தருகிறது நெருக்கடியாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழக அரசு கூடுதல் வேகத்தில் செயல்பட வேண்டும் , மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

தமிழகத்தில் நோய்த்தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் இதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு வருடங்கள் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது தவிர்த்து வேறு வழியில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாக உடனடியாக ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மூடு, மூடு, மூடு ,தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு காப்பாற்று காப்பாற்று கொரோனாவிலிருந்து தமிழகத்தை காப்பாறறு என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.