புதுமை பொங்க இனிமை தங்க செல்வம் பெருகட்டும்! அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்திகள்!

0
88

தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகை நாளை தினம் கொண்டாடப்படுகிறது, இதனை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் புதுமை, எளிமை, பொங்க, செல்வம் பெருக, வளமை வளர, எல்லோருக்கும் எங்களுடைய உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல், என்று நான்கு நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.

பிறருக்கு உணவு வழங்கி சாப்பிட நினைப்பது தெய்வ பண்பாகும், அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராமல் பாடுபடும் விவசாயிகள் தெய்வப்பண்பு உள்ளவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட ஜெயலலிதாவும், அதனை அடுத்து அவருடைய அரசும்,பல்வேறு திட்டங்களை தீட்டி சீரிய முறையில் செயல்படுத்தினர் என்பதை இந்த சமயத்தில் பெருமையுடன் நினைவு கூற விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும், நிலவட்டும். நலமும், வளமும், பெருகட்டும். அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், கொடுக்கட்டும். கடினமாக உழைத்து வரும் நம்முடைய விவசாய மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா, உள்ளிட்டோர் வழியில் மனதார வாழ்த்தி எங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உச்சரித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த், சசிகலா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, அய்யா கவுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்து ரமேஷ், நாடார் தமிழ்நாடு நாடார் சங்க பொதுச்செயலாளர் ரவி உட்பட பலரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.