பொன்னியின் செல்வன் ஆடியோ விற்பனை இத்தனை கோடியா? இதுவரை எந்தவொரு இந்திய படமும் நிகழ்த்தாத சாதனை!

0
71

பொன்னியின் செல்வன் ஆடியோ விற்பனை இத்தனை கோடியா? இதுவரை எந்தவொரு இந்திய படமும் நிகழ்த்தாத சாதனை!

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது .

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து கதையின் முக்கியக் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் ஆதித்த கரிகாலன், வந்திய தேவன், நந்தினி ஆகிய கதாபாத்திர அறிமுகங்களுக்குப் பிறகு தற்போது திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திர அறிமுக போஸ்டர் நேற்று வெளியானது.

இன்று மாலை படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் ஆடியோ உரிமையை அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து TIPS பிலிம்ஸ் & மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. 5 மொழிகளுக்கும் சேர்த்து சுமார் 24 கோடி ரூபாய் கொடுத்து இந்த உரிமையைக் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை எந்தவொரு இந்திய படமும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை என சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த நாவலை இரண்டு முறைப் படமாக்க எம் ஜி ஆர் முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை.