திமுகவின் முக்கிய பொறுப்புக்கு குறி வைக்கும் பிரசாந்த் கிஷோர்! அதிர்ச்சியில் திமுக சீனியர்கள்!

0
85

பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திமுக சார்பாக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகின்றார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்திலே அதிமுகவிற்கு எதிரான அலை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நோட்டமிட்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

இவருடைய குழுவில் சுமார் 150 நபர்கள் வேலை பார்ப்பதாக சொல்கிறார்கள் அவர்கள் அனைவரும் தமிழகத்தில் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். பிரசாந்த் கிஷோர் இதற்கு முன்பாக பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி வேலை பார்த்தார்கள். அங்கே நிதிஷ்குமார் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராக அமர்ந்தார். அதேபோல ஆந்திர மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி வேலை செய்தார்கள் இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.

இதையெல்லாம் உற்றுநோக்கிய தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தல் வருவதற்கு சுமார் ஒரு ஆண்டிற்கு முன்னரே பிரசாந்த் கிஷோர் இடம் டீல் பேசி விட்டார். திமுக சார்பாக பிரசாந்த் கிஷோருக்கு சுமார் 700 கோடி ரூபாய் கை மாறி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் வெகு காலமாகவே திமுக சார்பாக பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் வேலை செய்து வருகிறார்.ஆனால் பிரசாந்த் கிஷோர் கொடுத்த நெருக்கடி காரணமாக, திமுகவில் உட்கட்சிப் பூசல்கள் அதிகமாகியது. அதனால் திமுகவின் சீனியர்கள் அனைவரும் பிரசாந்த் கிஷோர் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பிரசாந்த் கிஷோர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அதுபோக தமிழகத்திலே திமுகவிற்கு ஆதரவாக வேலை பார்த்து வரும் பிரசாந்த் கிஷோர் அவர்களின் சூட்சமும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் எந்த வித மாற்றமும் நிகழப் போவதில்லை என்பது போல பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் இவரைப்போலவே தேர்தல் வியூக வகுப்பாக இருந்து வரும் சுனில் அவர்களை வைத்து அதிமுக தேர்தல் வேலைகளை செய்ய தொடங்கியது இவரும் பிரசாந்த் கிஷோருக்கு சற்றும் சளைத்தவரல்ல என்று சொல்லப்படுகிறது இன்னும் சொல்லப்போனால் பிரசாந்த் கிஷோர் அதைவிட சுனில் மிகவும் திறமையானவர் என்று சொல்லும் அளவிற்கு தற்போது அதிமுகவின் செயல்பாடு இருப்பதாக சொல்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் அவர்களால் திமுகவில் பல்வேறு குழப்பங்கள் எழுந்து அந்த கட்சி மிகப் பெரிய குழப்பத்தில் இருந்த சமயத்தில் மறுபுறம் அதிமுக மிக ஜரூராக தன்னுடைய பணிகளை செய்து வந்தது. அது நல்ல பலன்களையும் கொடுத்திருக்கின்றது. இதையெல்லாம் பார்த்த திமுக தலைமை பிரசாந்த் கிஷோர் மீது வெறுப்படைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.இந்த நிலையில், திமுக ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் அதன் பிறகு ஒரு மிக முக்கிய பதவியை பிரசாந்த் கிஷோர் தனக்கு கேட்டு இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது இந்த பதவியானது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக இருக்கிறது.

அதாவது டெல்லிகான தமிழக பிரதிநிதி என்ற பதவியாகும் இந்தப் பதவி கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது. அதிமுக சார்பாக கடந்த 2017ஆம் ஆண்டு அந்தக் கட்சியை சார்ந்த தளவாய் சுந்தரம் அவர்களுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. ஆளும் கட்சி சார்பாக மிக விசுவாசமாக இருக்க கூடிய மிக முக்கிய பிரமுகர்களுக்கு இந்த பதவி வழங்கப்படுவது பழக்கமாக இருந்து வருகிறது.அவ்வாறு விசுவாசமிக்க அவர்களுக்கு கொடுக்கப்படும் மிக முக்கிய பதவியை பிரசாந்த் கிஷோர் குறிவைத்து இருப்பது திமுக சீனியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.


ஒருவேளை பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்தபடி திமுக தலைமை இந்த பதவியை பிரசாந்த் கிஷோருக்கு வழங்கினால் அது நிச்சயமாக திமுகவில் ஒரு மிகப் பெரிய பிரளயத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.ஆனால் இதுவும்கூட மத்தியில் ஆளும் தரப்பாக இருந்துவரும் பாஜகவின் ராஜதந்திரம் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுகவை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே அந்த கட்சியின் நோக்கமாக இருந்து வருகிறது. அதற்காக தான் பிரசாந்த் கிஷோரை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது பாஜக என்று தெரிவிக்கிறார்கள்.