உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறப்பு !!

0
76

கடல் மட்டத்திலிருந்து, உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

அட்டல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாதையானது, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் மணாலி – லாகூர்-ஸ்பிதி இடையே சுமார் 9 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

இமாச்சல்பிரதேசத்தில் நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக இந்த சாலையானது ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே போக்குவரத்து சீராக அமைந்து வந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது,.

இமாச்சல் பிரதேசத்தில் மணாலியிலிருந்து லே நகரம்  வரும் மலையை குடைந்து 9.02கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதையை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்க பாதையானது கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் இதனால் மணாலி – லே பயண நேரமானது நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் குறைவாக அமையும்.

மேலும் இந்த பாதையில் ஒவ்வொரு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி வசதியும் ,60 மீட்டர் இடைவெளி ஒரு தீயணைப்பு கருவிகளும், 250 மீட்டர் இடைவெளி கண்காணிப்பு கேமராக்களும், 500 மீட்டர் தூரத்தில் அவசர வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த சுரங்கம் அமைப்பதற்கு கடந்த 2000-ஆம் ஆண்டு பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு முடிவு செய்து 2002-ஆம் ஆண்டு மே 26-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது .பின்பு அவர் பெயரிலேயே இந்த சுரங்க பாதைக்கு அடல் சுரங்கபாதை என்று பெயர் இடுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது .

மேலும் இந்த பாதையை எல்லைப்புற சாலைகள் நிறுவனம் ,கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக பருவநிலைக்கு இடையே அமைத்துள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைமை பொறியாளர் திரு கே.பி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

மேலும் சுயசாதி இந்தியா திட்டத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K