ராகுல் காந்திக்கு கொரோனோ பரிசோதனை செய்ய வேண்டும்-பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

0
48

ராகுல் காந்திக்கு கொரோனோ பரிசோதனை செய்ய வேண்டும்-பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

உலக அளவில் பேசப்படும் பொருளாகவும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி பல இன்னல்களை கொடுத்துக் கொண்டிருக்கும் பெயர் கொரோனா என்று சொல்லப்படுகின்ற கோவிட்-19 வைரஸ்.

இதுவரையில் இந்தியாவில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறி வந்த மத்திய அரசு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இந்தியாவில் இதுவரை 29 நபர்களுக்கு கொவிட்-19 ரக வைரஸ் தாக்கியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதன் விளைவாக N90 ரக மாஸ்குகளின் விற்பனையும் பெருமளவு அதிகரித்துள்ளது.இந்த அச்சம் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் மக்களவையையும் விட்டுவைக்கவில்லை.

கூடிப்பேசி ஆரத்தழுவி கைகுலுககி நலம் விசாரித்துச் சென்ற மக்களவை உறுப்பினர்கள் தற்போது கொரோனா அச்சத்தால் அதிகம் பேசாமல் செல்வதாக மக்களவை வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

நேற்று மக்களவை கூட்டத்தை விட்டு வெளியே வந்த பாஜக எம்பி ரமேஷ்பிதூரி ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.அதாவது கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இத்தாலி சென்று வந்தார்.அவருக்கு கொரோனோ இருக்குமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.

அவருக்கு முதலில் கொரோனோ உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் ஏனென்றால் ஒருவேளை அவருக்கு கொரோனோ தொற்று இருந்தால் அது அவருக்கு அருகில் இருப்பவர்களுக்கு பரவி அவர்கள் மூலம் எங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது என கூறினார்.மக்களவையின் உள்ளே இது குறித்து பேசாத பாஜக எம்பி வெழியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் ஏன் இவ்வாறான கருத்தை தெரிவித்தார் என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.

author avatar
Parthipan K