Savukku Shankar: தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளவர்தான் சவுக்கு சங்கர். இவரை கடந்த 30 ஆம் தேதி Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் ரெட் பிக்ஸ் ஊடகம் (Red Pix 24×7 YouTube channel) சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தது. இந்த நேர்காணலை ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார்.
இந்நிலையில் ரெட் பிக்ஸ் youtube சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் பெண் காவலர்களை பற்றி அவதூறான வகையில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சவுக்கு சங்கரை கடந்த நான்காம் தேதி கைது செய்தனர். இவர் மீது மொத்தமாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. இதனிடையே சவுக்கு சங்கரை பேட்டி அளித்த பிலிப்ஸ் ஜெரால்ட் அவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
மேலும் பிலிப்ஸ் ஜெரால்டு வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் சவுக்கு சங்கர் பேசிய கருத்திற்கும், ரெட் பிக்ஸ்-க்கும் எந்த உடன்பாடும் இல்லை என்று அந் நிறுவனத்தின் பொது மேலாளரும் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவியும் ஜேன் பெலிக்ஸ்கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுக்கு சங்கர் பேசிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து தானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல என்றும், பெண்களின் மாண்பையும் சுயமரியாதையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது. எனவே சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
மேலும் சர்ச்சைக்குரிய அந்த காணொளி வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணை தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் அந்த காணொளி பிரைவேட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக ஜேன் பெலிக்ஸ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!!