10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!

0
198

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

அதனை தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நடப்பாண்டு பொதுத்தேர்வு கட்டயாமாக நடைபெறும் என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து இன்று (பிப்ரவரி 1) முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணைய தேர்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் 9ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதேபோல், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Previous articleஇப்போதைக்கு கூடுதல் தளர்வுகள் வேண்டாம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!!
Next articleமகனின் முடிவால், மனமுடைந்து தற்கொலை செய்த பெற்றோர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here