ரசிகர்களின் சந்தேகத்திற்கு விடை அளித்த நடிகர் அஜித்குமாரின் மேனேஜர்!

0
71

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அதை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதோடு தமிழக அரசு இது தொடர்பாக கடந்த திங்கள் கிழமையிலிருந்து 14 நாட்கள் ஊரடங்கு அறிவித்து இருக்கிறது. தற்போது நேற்று முதல் இந்த ஊரடங்கு மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன் காரணமாக, பொதுமக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை நோய்த் தொற்று பரவல் நிவாரண வேலைக்காக நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

 

நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகனும் நடிகருமான சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் இணைந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தொற்று நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடியை வழங்கினார்கள். அதோடு நடிகர் ரஜினிகாந்த் இந்த தொற்று நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கினார் அதனை அவர் சார்பாக அவரது மகள் சௌந்தர்யா கொடுத்திருக்கிறார். இந்நிலையில். இந்த கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித்குமார் 25 லட்சம் வழங்கி இருக்கிறார். வங்கியின் மூலமாக நோய்த்தொற்று நிவாரணத்திற்கு நிதி வழங்கி இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

இதற்கு நடுவில் பத்திரிக்கையாளர்களுக்கு நடிகர் அஜித் 2.5 ரூபாய் நிவாரண நிதியாக கொடுத்ததாக காலை 8 மணி அளவில் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அனைவருமே அஜித் அவர்கள் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக செய்தியை வெளியிட தொடங்கினார்கள். ஆனால் இது தொடர்பாக விசாரணை செய்ததில் நடிகர் அஜித்குமார் 25 லட்சம் தான் வெளியாக கொடுத்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. இதுதொடர்பாக பலபேர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களிடம் விசாரணை செய்த சமயத்தில் அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் தான் நிதியாக கொடுத்தார் என்று பதிவு செய்து அனைவரும் சந்தேகத்திற்கும் விடை அளித்தார்.

அதோடு ஜிஆர்டி நிறுவனம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொது நிவாரண நிதிக்காக ரூபாய் ஒரு கோடி வழங்கியிருக்கிறது. அத்துடன் சோஹோ கார்பொரேஷன் சார்பாக 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. திமுகவின் அறக்கட்டளையின் சார்பாக இந்த நிவாரணப் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.