இங்கிலாந்து அணியின் கேப்டனை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!

0
100

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் அவர் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 180 ரன்கள் விளாசினார் .முன்னதாக நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார் ஜோ ரூட். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 64 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்கள் சேர்த்திருந்தார் ஜோ ரூட்.

அவர் இதுவரையில் 386 ரன்கள் இரண்டு டெஸ்டில் எடுத்து இருக்கின்றார். மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை ஆடவில்லை ஜோ ரூட்டையே இங்கிலாந்து அணி முழுமையாக நம்பி இருப்பது போல தெரிவதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மட்டுமே சமாளிக்கக்கூடிய வீரராக இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் முடிவு செய்ததாக தெரியவில்லை இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் மிகத் திறமையாக விளையாடினார்கள் டாஸ் வென்ற ஜோ ரூட் இந்தியாவை பேட் செய்ய அடுத்த சமயத்தில் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த கால இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் அலஸ்டேர், குக் மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் என் பில் ஜொனாதன், டிராட் ஆண்ட்ரு, போன்ற வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் சதம் அடிக்கும் திறமையுடன் கலந்து கொண்டார்கள். ஆனால் தற்போது இருக்கின்ற இங்கிலாந்து அணியில் எத்தனை பேர் தொடர்ந்து சதம் அடிக்க முடியும் என்று யோசித்தால் ஜோ ரூட்டை தவிர என்னால் வேறு யாரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அதுதான் அவர்களுடைய பேட்டிங் நிலை இதுதான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததற்கான காரணமாக, இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.