அட போங்கப்பா அதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பல! ஒரே போடாக போட்ட முன்னாள் அமைச்சர்!

0
96

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார், அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் பலரும் அவருடன் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார்கள் இது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்தது.

அதோடு அவர் தற்சமயம் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய முன்னாள் நிர்வாகிகலையும், தொண்டர்களையும், சந்திக்கும் விதத்தில் அரசியல் ரீதியாக சுற்றுப் பயணம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். இதுவும் அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அந்த கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கு மிக்க தலைமை கிடைக்கவில்லை என்ற கருத்து தொடக்கத்திலிருந்தே இருந்து வருகிறது அந்த குறையைப் போக்குவதற்காக சசிகலா அந்த இடத்திற்கு வந்து விட்டால் நன்றாக இருக்கும் என கருதுகிறார். ஆனால் அதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இடம் தராததால் அவர் கடுமையான கோபத்தில் இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இந்த வேலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அந்த சமயத்தில் அவர் தெரிவிக்கும்போது, பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்காக நான் சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக அரசை புகழ்ந்து பேசுவதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் தெரிவித்திருக்கிறார். என்னைப் பற்றி தெரிவித்த இதுபோன்ற கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை நான் சட்டப் பேரவையில் உரையாற்றிய வேறு நான் யாரையும் புகழ்ந்து பேசவில்லை. சுப்பராயனுக்கு வேண்டுமென்றால் அதனை படித்து தெரிந்து கொள்ளட்டும் என்று கூறியிருக்கிறார்.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட மிகப்பெரிய நபர்கள் செய்த சாதனைகளை பற்றி மட்டுமே உரையாற்றி இருக்கிறேன். இவர்கள் வேண்டுமென்றால் இடத்திற்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அந்த நிலை எனக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை சசிகலா தொடர்பாக ஓபிஎஸ் தெரிவித்த கருத்திற்கு நான் எந்தவிதமான எதிர் கருத்தும் கூற தயாராக இல்லை என்று செங்கோட்டையன் ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

சசிகலா அது விவகாரம் அதிமுக அவர்கள் மறுபடியும் சலசலப்பை உண்டாக்கியது கூடிய நிலையில், அவரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக செங்கோட்டையன் எந்தவிதமான கருத்தையும் கூற விருப்பம் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.அதிமுக இரு அணிகளான சமயத்தில் செங்கோட்டை அணை முதலமைச்சராக விருப்பம் கொண்டோம் என்று சசிகலா தரப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.