இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! இந்த மாவட்டங்களில் கனமழை.!!

0
253

இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதன் அடிப்படையில் மேற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகலாம் என்றும், படிப்படியாக இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

அதன் காரணமாக, தூத்துக்குடி திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அதிக இடங்களில் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஅட போங்கப்பா அதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பல! ஒரே போடாக போட்ட முன்னாள் அமைச்சர்!
Next articleபட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here