நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு!பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

0
80

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த ஆண்டின் அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.தொற்று பரவலின் காரணமாக நடப்பாண்டு பள்ளிக் கல்வி நிறுவனங்கள் செயல்படும் தேதி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பித்து வருகின்றனர்.தமிழ்நாடு அரசு சார்பில் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும் முயற்சி நடந்து கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியவாறு நடப்பாண்டின் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும்,நவம்பர் மாதம் பள்ளிகள் திறந்தால் பாடங்கள் 30 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் இந்த குறைந்த நாட்களுக்குள் நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் பள்ளி வளாகங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படவேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்யப்பட்டு தூய்மையான கழிவறை வசதிக்கும்,மற்றும் தூய்மையான குடிநீர் வசதிக்கு வழிசெய்யுமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது இதனால் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Pavithra