மாற்றுதிறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் மற்றும் 36 ஆயிரம் பேருக்கு நலஉதவி

0
160
Scooty for handicapped
Scooty for handicapped

திண்டுக்கல்லில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி மற்றும் நல உதவியை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர்களுக்கு என்று வழங்கி வருகிறது. அந்த வகையில், மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், மூன்று சக்கரம் கொண்ட ஸ்கூட்டர், மானியத்துடன் கடன் வசதி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மூன்று சக்கரம் கொண்ட ஸ்கூட்டர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கினார்.நிகழ்ச்சிக்குப் பின் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 36 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு இலவசமாக பயணம் செய்வதற்கான பயண அட்டை, கல்வி உதவித்தொகை, அவ்வப்போது அரிசி உள்ளிட்ட இலவச பொருட்கள் ஆகியவற்றை வழங்கி உதவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர் அலுவலத்தில் பணிபுரியும் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

author avatar
Parthipan K