தடுப்பு ஊசி போட்டு கொள்ளாதவர்களின் பட்டியலை கேட்கும் தலைமைச் செயலாளர்!

0
72

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களில் 73% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 35 சதவீத நபர்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. தகுதி பெற்ற எல்லோருக்கும் மிக விரைவில் தடுப்பூசி கிடைக்கப் பெறும் விதத்தில் வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக 2 தடுப்பூசி முகாம் நடத்த அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதுவரையில் தடுப்பூசி போடாத பொதுமக்களின் பட்டியல்  வார்டு வாரியாக நகராட்சி, மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி, வாரியாகவும், தயாரிக்க மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது சிறப்பு தடுப்பூசி தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், என அனைத்து துறைகளையும், ஒன்றாக இனைத்து நடத்தப்படும் திங்களை தவிர மற்ற நாட்களில் அரசு மருத்துவ நிலையங்களில் தொடர்ந்து தடுப்பு ஊசி செலுத்தப்படும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு போதுமான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் காணொளி வழியாக கூட்டம் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.