போர் என்ற பெயரில் அத்துமீறும் ரஷ்ய ராணுவம்! 16 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ரஷ்ய வீரரின் அராஜக செயல்!

0
61

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது இதில் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் இதில் உக்ரைன் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது அதே நேரம் ரஷ்யா பக்கமும் அதே பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

2 மாத காலமாக தொடர்ந்து வரும் இந்த கடுமையான போர் எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதனடிப்படையில் உலக தலைவர்கள் பலரும் ரஷ்யாவிடம் தொடர்புகொண்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருந்தாலும் ரஷ்யா இது தொடர்பாக யார் பேச்சையும் கேட்பதாகயில்லை.

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போர் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகிறார்கள். சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விருப்பம் கொள்பவர்கள் ரஷ்யாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலை உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதேநேரம் உக்ரைன் நாட்டு அரசாங்கமும் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கி வருவதற்கு தயாராகவில்லை. தங்களால் முடிந்தளவுக்கு ரஷ்யாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது உக்ரைன் அரசு.

இந்த போரை பயன்படுத்திக்கொண்டு ரஷ்ய வீரர்கள் சிலர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. உக்ரைனிய பொதுமக்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்துள்ள கெர்சன் கிராமத்தில் வசித்து வரும் 16 வயதுடைய 6 மாத கர்ப்பிணி ஒருவர் சிஎன்என்னுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்ததாவது, குண்டுவீச்சிலிருந்து காத்துக் கொள்வதற்காக எங்களுடைய வீட்டின் அடித்தளத்தில் நாங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் உணவு கொடுப்பதற்காக மாலை சமயத்தில் குழந்தைகளுடன் வெளியே வரும் போது குடிபோதையில் இருந்த ரஷ்ய வீரர் ஒருவர் எங்களை பார்த்து விட்டார். அவர் எங்களை நோக்கி அனைவருக்கும் வயது என்ன? என்று கேள்வி எழுப்பினார்

12 மற்றும் 14 வயதில் இரண்டு சிறுமிகள் இருந்தனர் எனக்கு வயது பதினாறு முதலில் என்னுடைய தாயாரை அவர் கூப்பிட்டார் உடனடியாக அவரை விட்டுவிட்டு அதன் பிறகு என்னை கூப்பிட்டார் என தெரிவித்திருக்கிறார் அந்த பெண்மணி.

நான் அருகில் சென்றவுடன் என்னுடைய உடைகளை கழற்றுமாறு சத்தம் போட்டார். நான் முடியாது என்று சொன்ன போது என்னுடன் படுக்கவில்லை என்றால் இன்னும் 20 பேரை கூப்பிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார் என்று தெரிவித்திருக்கிறார்.

அதே போன்று குடிபோதையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரஷ்ய வீரர் அந்த கர்ப்பிணியை கொலை செய்யவும் முயற்சி செய்திருக்கிறார். மற்றொரு ரஷ்யவீரர் இந்த சம்பவங்களை நடக்காமல் தடுப்பதற்கு முயற்சி செய்தார்.

அதனை நிறுத்தும்படியும் கூறியிருக்கிறார். ஆனால் குடிபோதையில் இருந்த ரஷ்ய வீரர் அதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

குடிபோதையில் இருந்தவருக்கு நீலநிற கண்கள் இருந்தன என்று கூறப்படுகிறது, ஆனால் அடர்த்தியாக இருந்தனர் வேறு எதுவும் எனக்கு நினைவில்லை என்று 16 வயது கர்ப்பிணி தெரிவித்திருக்கிறார். இதேபோல மற்ற ரஷ்ய வீரர்கள் அந்த ஆசாமியை ப்ளூ என்றே அழைத்திருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் அந்த ரஷ்ய வீரர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் எளிதில் கிடைக்கக்கூடிய சிறுமியை தேடி கிராமத்திற்குள் அந்த வீரர் செல்கிறார் என சிலர் தெரிவித்துள்ளார்கள்.

நாங்கள் உணவுக்காக வெளியே வரவில்லையென்றால் எங்களை அவர் பார்த்திருக்க மாட்டார். என்னை தொட்டிருக்கக்கூடமாட்டார் என்று அந்த சிறுமி தெரிவித்திருக்கிறார்.

ஆனால் பாலியல் வன்கொடுமையுடன் முடிந்துவிடவில்லை அடுத்தநாள் சிறுமியை மற்றொருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரும் சத்தம் போட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இதன் காரணமாக, பயந்துபோன அந்த சிறுமி அச்சத்தில் அழுதிருக்கின்றார், ஆனால் சிறுமியை உண்மையை கூறுகிறாரா அல்லது பொய் கூறுகிறார் என்று அறிவதற்காக பரிசோதனை செய்தேன் என்று சிறுமியிடம் அவர் கூறியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவையா? என்பது தொடர்பாக தனிப்பட்ட முறையில் சிஎன்என் விசாரிக்கவில்லை என்ற போதும் உக்ரைனிய வழக்கறிஞர்கள் இந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து உண்மையை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு போர்க்குற்றம் என சிஎன்என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.