ஒரு வாரத்தில் தேமல் மறைய எளிய முறைகள்!! இருப்பவர்கள் இதனை மட்டும் செய்து பாருங்கள்!!

0
171

ஒரு வாரத்தில் தேமல் மறைய எளிய முறைகள்!! இருப்பவர்கள் இதனை மட்டும் செய்து பாருங்கள்!!

தேமல் என்பது பெரும்பாலும் வியர்வையால் ஏற்படுகிறது. தேமல் குழந்தைகள் முதல் முதியவர் வரை வரக்கூடிய எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோளில் தொற்று நோய்கள் பங்கஸ் என அழைக்கப்படுகின்ற காளான் படை நோய்கள் வருவது அதிகம். இது மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோல் கை, கால் இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக திட்டி திட்டாக படைகள் போன்று காணப்படுகிறது. இதுவே தேமலின் அறிகுறியாக கருதப்படுகிறது. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவது. சிறிதளவு அரிப்பு ஏற்படுவது இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், தைராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.

இன்றைய நவீன மருத்துவத்தில் தேமழை போக்க பலதரப்பட்ட வியர்வை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள் நடைமுறையில் உள்ளன. தினமும் இருவேளை குளித்து தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பவுடர்களின் ஒன்றை சில வாரங்கள் தொடர்ந்து பூசுவதால் தேமல் விடைபெற்று கொள்ளலாம்.

மருத்துவமனை செல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தேமலை குணப்படுத்த முடியும்.

தேவைப்படும் பொருள்கள்

சீமை அகத்தி இலை

கருஞ்சீரகம்

குப்பைமேனி இலை

கரிசலாங்கண்ணி

செய்முறை

1. சீமை அகத்தி இலையை தேன் நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் திட்டு திட்டாக இருக்கும் தேமல்கள் மறையும்.

2. கருஞ்சீரகம் நன்கு அரைத்து பொடி செய்து அதில் எலுமிச்சைச் சாறை பிழிந்து அதனை திட்டித் திட்டாக இருக்கும் இடத்தில் தேய்த்து வருவதால் தேமல் குறையும்.

3. குப்பைமேனி இலையை எடுத்து அதன் சாறை பிழிந்து அதனை தேமல் அதிகம் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் உடனடியாக தேம்பல் பிரச்சனை விரைவில் குணமடையும். இது கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் கரிசலாங்கண்ணி இலையை அரைத்து பூசி வரலாம் இதுவும் நல்ல தீர்வைத் தரும்.

இதுபோன்று செய்து வருவதால் தேமல் விரைவில் குணமடையும். மேலும் தேமல் வராமல் தடுக்க மற்றவர்கள் பயன்படுத்திய ஆடைகள் சீப்பு மற்ற பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதால் தேமல் தவிர்க்கப்படும். தேமல் இருப்பவர்களிடம் இருந்து ஆடை வாங்கி அணியும் போது உங்களுக்கும் தேமல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சுத்தமாகவும் ஒரு நாளுக்கு இரண்டு முறை குளித்தும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

author avatar
Jeevitha